ஒரு தமிழக வீரர் கூட இல்லாமல்... இந்தியா வென்ற முதல் உலகக் கோப்பை இதுதான்!

இந்திய அணி நேற்று ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை (ICC T20 World Cup 2024) கைப்பற்றியிருந்த நிலையில், இதுதான் அணியில் ஒரு தமிழக வீரர் கூட இல்லாமல் இந்தியா வென்ற முதல் கிரிக்கெட் உலகக் கோப்பையாகும்.

இந்த முறை டி20 உலகக் கோப்பை அணியில் ஒரு தமிழக வீரர் கூட தேர்வானது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 

1 /8

இந்திய அணி இதுவரை 1983 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, 2002 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, தற்போது 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை என மொத்தம் 6 ஐசிசி கோப்பைகளை கைப்பற்றியிருக்கிறது.   

2 /8

இதில் கபில் தேவ் தலைமையில் 1983ஆம் ஆண்டு இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை சௌரவ் கங்குலி தலைமையில் இந்திய அணி வென்றது.   

3 /8

அதன்பின், 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகியவை தோனியின் தலைமையில் இந்திய அணி வென்றது. மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டன் அவர்தான்.  

4 /8

தற்போது கபில் தேவ், தோனிக்கு அடுத்து ஐசிசி கோப்பைகளை வென்ற கேப்டன்கள் வரிசையில் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டி தோல்வி, 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி, 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப்போட்டி என ரோஹித் அடுத்தடுத்து கோட்டைவிட்ட நிலையில் தற்போது இந்த 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கைப்பற்றி உள்ளார்.   

5 /8

இந்நிலையில், தமிழக வீரர் ஒருவர் இல்லாமல் முதல்முறையாக ஐசிசி உலகக் கோப்பை ஒன்றை இந்திய அணி கைப்பற்றியிருக்கிறது. இதுகுறித்து இதில் காணலாம்.   

6 /8

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றிய போது, தமிழக வீரர் கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அதேபோல், 2007ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையின்போது தினேஷ் கார்த்திக்கும், 2011 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் இடம்பெற்றிருந்தனர்.   

7 /8

அதன்பின் தற்போதைய 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில் இதில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை. முக்கியமாக நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படாதது பல விமர்சனங்களை கிளப்பியது. எனவே, இந்த முறைதான் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை கைப்பற்றும்போது அதில் தமிழக வீரர் இல்லை.  

8 /8

சாம்பியன்ஸ் டிராபி இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை, உலகக் கோப்பை தொடர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்படி பார்த்தால் 2002 சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு தமிழரும் இல்லை எனலாம். மறுபக்கம் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் முரளி விஜய், தினேஷ் கார்த்திக், அஸ்வின் என மூன்று பேர் இடம்பெற்றிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.