1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன

  • Jan 27, 2021, 23:34 PM IST
1 /10

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்க ரதத்தில் முருகனை கண்ட பக்தர்களின் அரஹர கோஷம் பழநி மலையில் எதிரொலித்தது. முருகா. முருகா என பக்தர்கள் உருக, சாந்த சொரூபியாய் முருகக் கடவுள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

2 /10

தைப்பூசம் விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப்பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்பிட்டுள்ளன

3 /10

தருகாசுரனை முருகன் வதம் செய்த நாள் தை பூசம். நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.

4 /10

காவடிகளில் பல விதங்கள் உண்டு. பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி என பல பொருட்களை காவடியில் சுமந்து சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்வார்கள்.

5 /10

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயிலில் தைப்பூசதை ஒட்டி நான்கு நாட்கள் கூத்துகள் நடத்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன

6 /10

தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா அறுபடைவீடுகளிலும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.  

7 /10

முருகனின் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. 

8 /10

தைப்பூச திருவிழாவை நாளை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் விரதமிருந்து மாலையணிந்து பாதயாத்திரையாக வந்து தரிசித்துக் கொண்டிருக்கின்றனர்.

9 /10

தைப்பூசத்திற்கான சிறப்பு தேரோட்டம் ஜனவரி 28ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

10 /10

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது