2025: ராகு சுக்கிரன் சேர்க்கையில் ஜாக்பாட் அடிக்கும் முக்கிய 3 ராசிக்காரர்களுக்கு பண மழை வரபோகுது!

ஒரு மாதம் கடந்தால் புது வருடம் பிறந்துவிடும். புது வருடத்தில் புதிய உறவுகளும் ஜொலிக்கும். காசு மழை பொழிய ஆரம்பிக்கும். ராகு சுக்கிரன் சேர்க்கை என்பது ராஜயோகத்தைப் பெற்றுத்தர ஒரு வழியை ஏற்படுத்தித் தரும் அதிர்ஷ்ட சேர்க்கை என்று சொல்வார்கள். மேலும் இதுபற்றி பார்க்கலாம்.

கிரகங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.  அந்த சமயத்தில் மனிதர்களின் வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் இரண்டு கிரகங்கள் சேர்க்கை ஏற்பட்டால் அதனை அதிர்ஷ்டம் என்று சொல்லப்படும். இந்த அதிர்ஷ்ட சேர்க்கையில் சில ராசிக்காரர்கள் காசு மற்றும் இன்பம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. முக்கிய ராசிகள் பார்ப்போம்.

1 /9

ராகு சுக்கிரன் சேர்க்கையால் மூன்று ராசிக்காரர்கள் வாழ்க்கையே ஒட்டுமொத்தமாக மாறப்போகிறது எப்படி அமையப்போகிறது இந்த 3 ராசிகளின் வாழ்க்கை என்று கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.   

2 /9

ராகு சுக்கிரன் சேர்க்கையில் அதிர்ஷ்ட ஜாக்பாட் அடிக்கும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் புத்தாண்டு தொடக்கத்தில் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கும் நேரமாக அமையப்போகிறது. 

3 /9

கடக ராசிக்காரர்கள் குடும்பங்களில் நல்ல உறவில் ஈடுபடுவீர்கள். மௌனம் என்பது சில பிரச்சனைகளைச் சரிசெய்ய உதவிப்புரியும். இதனால் உங்கள் மீது மிகுந்த மரியாதை ஏற்படும். கடக ராசிக்காரர்களின் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும்.   

4 /9

கடக ராசிக்காரர்களின் நீண்ட நாள் கனவு தற்போது நினைவாகப்போகிறது. சமூகத்தின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். சக மனிதர்கள் உங்கள் மேல்  அன்பு ஆசை வைப்பார்கள். கடக ராசிக்காரர்கள் விழிப்புணர்வுடனும் கவனமுடனும் இருந்தால் வெற்றி உங்களைத் தேடி வரும். 

5 /9

துலாம் ராசிக்காரர்கள் சோம்பேறியிலிருந்து விடுபடும் நேரம் வந்துவிட்டது. சிறிது கண் விழித்து உலகைப் பாருங்கள் அதில் என்னென்ன விஷயங்கள் புதிதாக மாறிவருகிறது என்று சற்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். துலாம் ராசிக்காரர்கள் உடல்நலம் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் எளிமை என்று நினைக்கும் ராசிக்காரர்களே எளிமையாகக் கிடைக்க வேண்டும் என்றால் அதில் உழைப்பும் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைவில் கொள்ளுங்கள்.   

6 /9

துலாம் ராசிக்காரர்கள் கவலைகள் உங்களை விட்டுப் பாய் சொல்லும் நேரம் தற்போது வந்துவிட்டது. இந்த ராசிக்காரர்கள் தான் வாழ்க்கையில் எதிர்பார்க்காத நன்மைகள் பலவற்றை இனி பார்க்க நேரிடும். கோபம் சிறிது கட்டுப்படுத்த வேண்டும். கோபம் எல்லாவற்றிலும் காண்பித்தால் அது உங்களுக்கு ஆபத்தாக மாறலாம்.   

7 /9

விருச்சிகம்: சுக்கிரன் ராகு சேர்க்கையின் எதிரொளியாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு  நல்ல பலன் கிடைக்கும். இதில் விருச்சிக ராசிக்காரர்களிடம் இருக்கும் மனக்கவலைகள், துயரங்கள் நீங்கும் நேரமாக அமையப்போகிறது.  மேலும் விருச்சிக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சுகம் காண்பார்கள். வாழ்க்கையில் கஷ்டங்கள் விலகி இன்பங்கள் பெருக இந்த சுக்கிரன் ராகு சேர்க்கை உங்களுடன் பக்கபலமாக இருக்கிறது.   

8 /9

விருச்சிக ராசிக்காரர்கள் குறிப்பாக மாணவர்கள் தங்கள் கல்வியில் உயர்ந்த இடத்தில் வருவீர்கள். கவனமுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். இந்த ராசிக்காரர் அதிக துணிச்சல் உடையவர்கள். கவலைகள் எவ்வளவு வந்தாலும் சிறிதும் மனந்தளராமல் வாழ்க்கை நோக்கிச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.  இந்த ராசிக்காரர்களின் உடல் நலத்தில் ஏதேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் விரைவில் குணமடைவார்கள்.   

9 /9

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.