குரு பெயர்ச்சி 2025... குபேர யோகத்தைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்

குரு பெயர்ச்சி 2025: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் 2025ல் ஒருமுறை அல்ல மூன்று முறை பெயர்ச்சியாகிறார். புதிய ஆண்டில், குரு பகவான் மூன்று முறை பெயர்ச்சியாவது ஜோதிடத்தில் அதிசார பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது

குருவின் ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களை பாதிக்கும் என்றாலும், சிலருக்கு, குபேர யோக போன்ற பலன்கள் கிடைக்கும் என்கின்கின்றனர் ஜோதிடர்கள். குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் என்பார்கள். இந்நிலையில், 2025ம் ஆண்டில், குரு பெயர்ச்சி, வக்ர பெயர்ச்சி ஆகியவற்றினால் நன்மைகளை அடையும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

1 /8

2025 குரு பெயர்ச்சி: 2025 புத்தாண்டில் குரு பகவான் தனது ராசியை 3 முறை மாற்றிக் கொள்கிறார். அதோடு, 2025 பிப்ரவரியில் வக்ர நிவர்த்தியும் அடைகிறார். இதனால் சில ராசிகளுக்கு பண வரவு, புதிய வேலை, வெளியூர் பயணம், உயர்கல்வி, திருமணம் போன்ற விஷயங்களில் நற்பலன்கள் அமையும். 

2 /8

மிதுனத்தில் குரு பெயர்ச்சி: மே 14 புதன்கிழமை இரவு 11:20 மணிக்கு குரு பெயர்ச்சி மிதுன ராசியில் நடைபெறுகிறது. மிதுன ராசியில் சுமார் 6 மாதங்கள் சஞ்சரித்து அக்டோபர் 18ஆம் தேதி அதிசாரமாக மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு நுழைகிறார். 

3 /8

கடகத்தில் குரு பெயர்ச்சி: அக்டோபர் 18ஆம் தேதி, அதிசாரமாக மிதுன இருந்து கடக ராசிக்கு மாறி பிறகு டிசம்பர் 5ம் தேதி மீண்டும் மிதுன ராசிக்கு வருகிறார். இந்நிலையில் 2025 குரு பெயர்ச்சியினால் பல வகைகளில் நன்மைகளையும் குபேர யோகம் போன்ற பலன்களை பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

4 /8

குரு வக்ர நிவர்த்தி 2025: குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ள நிலையில், குரு பெயர்ச்சிக்கு முன்னதாக, 2025 பிப்ரவரி மாதம் குரு வக்ர நிவர்த்தியும் அடைய உள்ளார். 2025 பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள குரு வக்ர நிவர்த்தி மற்றும் 2025 மே மாதத்தில் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு புத்தாண்டில் நற்பலன்களை கொண்டு வரும்.

5 /8

மேஷம்: குரு பெயர்ச்சியினால், மேஷ ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். நிலுவையில் இருந்த சில வேலைகள் முடிவடையும். வெளிநாட்டில் இருந்து நிதி ஆதாயத்திற்கான அறிகுறிகள் உள்ளன. நிலம், கட்டிடம், வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகம்.  

6 /8

தனுசு: குரு பெயர்ச்சியினால் தனுசு ராசிக்காரர்கள் வேலையில் லாபம் அடைவார்கள். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் அமையும். முக்கியமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். பயண வாய்ப்புகள் உண்டாகும். நல்ல செய்தி கிடைக்கலாம். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீடு, மனை, வாகனம் வாங்கும் உங்கள் கனவு நிறைவேறும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.

7 /8

கும்பம்: குரு பெயர்ச்சியினால் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் குறைவில்லாமல் இருக்கும். வேலை தேடுபவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவுடன், உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழில் ரீதியாக வெற்றி பெறுவீர்கள்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.