சாப்பிட்ட பிறகு மறந்தும்கூட செய்யக்கூடாத விஷயங்கள்!

உணவை சாப்பிட்டதும் சில விஷயங்களை செய்யக்கூடாது என்று காலம்காலமாக சொல்லப்படுவதற்கு பின்னால் சில அறிவியல் உண்மைகள் உள்ளது.

 

1 /4

சாப்பிட்டவுடன் குளிக்கக்கூடாது, ஏனெனில் நமது உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு உணவு சரியாக செரிமானம் ஆகாமல் போய்விடும்.    

2 /4

சாப்பிட்டவுடன் உடற்பயிற்சிகள் எதையும் செய்யக்கூடாது, அப்படி செய்தால் வாந்தியுணர்வு, வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.  குனிவது, உடலை வளைப்பது போன்ற செயல்களை சாப்பிட்டவுடன் செய்யக்கூடாது, இது அமில சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்.  

3 /4

சாப்பிட்டவுடன் ஒரு குட்டித்தூக்கம் போடுவது அனைவருக்கும் விருப்பமான ஒன்று ஆனால் சாப்பிட்டதும் தூங்கினால் செரிமான கோளாறு மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படும்.  

4 /4

சாப்பிட்டவுடன் டீ அல்லது காபி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அதிலுள்ள பினாலிக் கூறுகள் உணவிலுள்ள இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.