குழந்தை பெற முயற்சிக்கும் தம்பதிகளிடம் இதையெல்லாம் சொல்லக்கூடாது

Infertility Tips : குழந்தை பெற முயற்சிக்கும் தம்பதிகளிடம் தேவையில்லா ஆலோசனைகளை கொடுக்க கூடாது.

 

குழந்தையைப் பெற முயற்சிக்கும் தம்பதியருக்கு நீங்கள் தேவையில்லாத ஆலோசனைகளை வழங்குவதற்கு முன், நீங்கள் சொல்லப் போவது உண்மையில் அவசியமானதா என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்கள் ஏன் குழந்தையைப் பெற முடியவில்லை என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டக்கூடாது.

 

1 /8

அது அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்ற உண்மையைப் நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள். மேலும் அவர்களின் வாழ்க்கைக்கு எது சிறந்தது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.   

2 /8

எனவே அவர்களை புண்படுத்தும் அல்லது சங்கடமான சூழ்நிலையில் தள்ளும் எதையும் கூறுவதைத் தவிர்க்கவும். குழந்தையைப் பெற முயற்சிக்கும் தம்பதிகளிடம் நீங்கள் கூறுவதைத் தவிர்க்க வேண்டிய இன்னும் சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

3 /8

கடவுளிடம் விட்டு விடுங்கள் - குழந்தைபெற முயற்சிக்கும் தம்பதிகளிடம் சென்று கடவுளிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் கடினமாக முயற்சி செய்யாதீர்கள். நடக்கும் விஷயம் கண்டிப்பாக நடக்கும் என்று சொல்வதை தவிர்க்கவும். 

4 /8

உண்மையில் நீங்கள் சொல்வதால் அவர்களுக்கு எந்த ஆறுதலும் ஏற்பட போவதில்லை, மாறாகவருத்ததில் இருப்பவர்களுக்கு கூடுதல் வருத்ததையே ஏற்படுத்தும். 

5 /8

நீங்கள் ஏன் தத்தெடுக்கக்கூடாது? - இந்த கேள்வியையும் நீங்கள் கேட்க்ககூடாது. குழந்தை பெற முயற்சிக்கும் தம்பதிகளுக்கு இந்த விஷயம் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. தெரிந்தும் அந்த விஷயத்தை அவர்கள் செய்யவில்லை என்றால் அதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தம்.

6 /8

நீங்கள் ஏன் குழந்தைகளைப் பெற விரும்புகிறீர்கள்? - இந்த கேள்வி மிகவும் மோசமானது. குழந்தைகள் ஒரு தொல்லை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியாக நினைக்கமாட்டார்கள். 

7 /8

அவர்கள் குழந்தையைப் பெற முயற்சிப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது, அவர்கள் என்ன விரும்புகிறார்கள், ஏன் விரும்புகிறார்கள் என்பதில் உறுதியாக இருக்கும் வரை முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.

8 /8

விதியாக கூட இருக்கலாம் - இதை அவர்களிடம் சொல்வதாலும் எந்த பிரயோஜனமும் இல்லை. குழந்தை என்பது அவர்களின் விதியில் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது. அப்படியென்றால் நீங்கள் ஏன் அதை சொல்ல வேண்டும். உங்களுக்குள் தோன்றுவதை நீங்களே மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.