மாரடைப்பு பயம் வேண்டாம்; இதனை கடைபிடித்தால் போதும்..!

மாரடைப்பு அபாயத்தை குறைக்க வாழ்வியல் முறைகளில் ஒருசில எளிய மாற்றங்களை செய்தாலே உடல் மற்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

1 /5

1. சாப்பிடுவது, தூங்குவது, வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது என எல்லாவற்றிலும் ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும்.   

2 /5

2. வெள்ளரி, ஆப்பிள், பப்பாளி, தயிர், மோர், கேரட் போன்றவற்றை தினமும் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3 /5

3. எப்பொழுதும் எடையை சீராக வைத்திருங்கள், குறிப்பாக தொப்பை கொழுப்பை தவிர்க்கவும் புகைபிடிக்கும் பழக்கத்தை உடனடியாக கைவிட முயற்சி செய்யுங்கள்.

4 /5

4. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருப்பதோடு, பஜ்ஜி, பக்கோடா போன்றவற்றை மிகக் குறைவாகவே சாப்பிடுங்கள். மாதம் ஒருமுறை எண்ணெய் பண்டங்களை சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது. ஆனால், அதனை வழக்கமாக வைத்திருக்க கூடாது.

5 /5

5. நீங்கள் இரவு ஷிப்டில் வேலை செய்தால், இரவு உணவை சுமார் 6 மணிக்குள் சாப்பிட்டு விடவும். இதன் பிறகு 8 மணி வரை பால், பழங்கள் போன்றவற்றை உண்ணலாம்.