கொலஸ்ட்ரால் இதயப் பிரச்சனைகளுடன் நேரடியாக தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சூழ்நிலையில், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். இதை செய்வது நமது பொறுப்பு என்றுகூட சொல்லலாம். கொலஸ்ட்ராலை குறைப்பதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம். கொலஸ்ட்ரால் நம் உடலில் நல்ல மற்றும் கெட்ட வடிவங்களில் காணப்படுகிறது. உணவில் சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். மேலும், கொலஸ்ட்ரால் அதிகரிப்பதையும் தடுக்கலாம்.
இந்த நவீன காலகட்டத்தில் வாழ்க்கை முறை காரணமாக மக்கள் பல வித உடல் உபாதைகளுக்கும் நோய்களுக்கும் ஆளாகிறார்கள். பலருக்கு உடல் எடை அதிகரிப்பு, அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் ஆகியவை பெரிய பிரச்சனைகளாக உள்ளன. இவற்றின் காரணமாக இதய நோய்களுக்கான சாத்தியமும் அதிகமாகின்றது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் 3 சூப்பர் உணவுகளை இந்த பதிவில் காணலாம்.
நட்ஸ், உலர் பழங்கள் போன்றவை கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பெரும் உதவியாக இருக்கும். ஆனால், நட்ஸ் என்ற பெயர் வரும்போதெல்லாம் பொதுவாக மக்கள் பாதாம், முந்திரி, திராட்சை போன்றவற்றை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்வதைப் பார்த்துள்ளோம். ஆனால் நீங்கள் கொலஸ்ட்ராலை குறைக்க விரும்பினால், அக்ரூட் பருப்புகளையும் உட்கொள்ளுங்கள். புரதம் மற்றும் நார்ச்சத்து இரண்டும் அக்ரூட் பருப்பில் உள்ளன. வால்நட்ஸை உணவில் சேர்ப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவை வெகுவாக குறைக்கலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலமும் கொலஸ்ட்ராலை குறைக்கலாம். பழங்கள் மற்றும் காய்கறிகளில் மிகச் சிறிய அளவு கலோரிகள் உள்ளன என்பதை நினைவில் கொள்க. இது தவிர, வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகளும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகின்றன. இவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் உங்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
இதைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்!! ஆனால் பாப்கார்னும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கும் என்பது உண்மை. பாப்கார்னில் நார்ச்சத்து, வைட்டமின் பி, மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவியாக இருக்கும். ஆகையால் தினசரி உணவில் பாப்கார்னை சேர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)