சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....
புதுடெல்லி: உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் ஏதாவது ஒரு விதத்தில் சரித்திரத்தின் பக்கங்களில் பதிவ்வாகின்றன. சில வெளியே தெரியும், பற்பல நமக்கு மட்டுமே தெரியும். வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், இன்றைய தினம் உலகத்தில் நடைபெற்ற முன்பு எப்போதும் நடைபெறாத நிகழ்வுகளின் பதிவுகள் பல இருக்கும். அதில் சில…
டிசம்பர் 25 ஆம் தேதியன்று நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகள்... கிறிஸ்துமஸ் முதலில் எப்போது பதிவு செய்யப்பட்டது தெரியுமா? இதுபோன்ற சுவராசியமான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...இந்த நாள் சரித்திரத்தின் நினைவலைகளிலிருந்து சில துளிகள்…
Also Read | வரலாற்றில் டிசம்பர் 24: MGR மறைவு முதல், இந்திய விமானம் கடத்தப்பட்டது வரை...
336 ஆண்டுகளுக்கு முன்பு ரோமில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது...
1924, December 25: இந்தியாவின் தன்னிகரற்ற தலைவன் போக்ரான் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று...
1991ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் மைக்கேல் கோர்பச்சேவ் (Mikhail Gorbachev)
2009: மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோ-வுக்கு (Liu Xiaobo) பெய்ஜிங்கில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது
1947: சீனா ஒரு நிரந்தர அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட நாள் டிசம்பர் 25
1741: ஆண்டர்ஸ் செல்சியஸ் (Anders Celsius) என்ற பிரபல வானியலாளர், சென்டிகிரேட் (Centigrade) வெப்பநிலை அளவை அறிமுகப்படுத்துகிறார்