டோக்கியோ ஒலிம்பிக்கைத் தவறவிட்ட டென்னிஸ் நட்சத்திரங்களின் பட்டியல்…
பல டென்னிஸ் நட்சத்திரங்கள் பல காரணங்களால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். அதில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரு சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போன டென்னிஸ் நம்பிக்கை நட்சத்திரங்களில் சிலர்…
Read Also | கோவாவில் காதலியோடு லியாண்டர் பயஸ் ஜாலி? வைரலாகும் புகைப்படங்கள்
டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தார். முன்னாள் உலக நம்பர் -1 முழங்காலில் ஏற்பட்ட காயங்களால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து நான் விலகுவதாக அறிவித்தார். (புகைப்படம்: AFP)
விம்பிள்டன் சாம்பியன்ஷிப் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரஃபேல் நடால் ட்விட்டரில் தெரிவித்தார். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாக நடால் குறிப்பிட்டார். (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)
23 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் டென்னிஸ் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிவித்தார். இதற்கான காரணங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. 40 வயதாகும் செரீனா வில்லியம்ஸ், 2012 இல் லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். அதோடு, சகோதரி வீனஸ் வில்லிமஸுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் மூன்று முறை தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். சிட்னி (2000), பெய்ஜிங் (2008) மற்றும் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வில்லியம்ஸ் சகோதரிகள் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதங்கம் வென்றனர். (புகைப்படம்: AFP)
"ருமேனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை விட வேறு எதுவும் எனக்கு பெருமை சேர்க்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு ஏற்பட்ட காயத்திலிருந்து மீள அதிக நேரம் தேவைப்படுகிறது. அதனால் இந்த கோடையில் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுகிறேன்" என்று ஹாலெப் ட்வீட் செய்துள்ளார். (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)
இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் நிக் கிர்கியோஸ் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடவில்லை. ரசிகர்கள் இல்லாத போட்டியில் கலந்துக் கொள்ள அவர் விரும்பவில்லை. "ஒலிம்பிக்கில் ஆஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எனது கனவாக இருந்தது, எனக்கு மீண்டும் அந்த வாய்ப்பு கிடைக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால் என்னைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும். ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாடுவது என்னால் முடியாதது" என்று என்று 26 வயதான கிர்கியோஸ் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். (புகைப்படம்: ராய்ட்டர்ஸ்)
"அனைவருக்கும் வணக்கம், உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள எனக்கு சில சோகமான செய்திகள் உள்ளன. எனது குழுவுடன் பேசி நிலைமையை ஆராய்ந்த பின்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதற்கான மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்" என்று 27 வயதான டொமினிக் தீம் ட்விட்டரில் தெரிவித்தார். "என்னைப் பொறுத்தவரை, எல்லா விளையாட்டு வீரர்களையும் போலவே, ஒலிம்பிக்கில் பங்கேற்பதும் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவதும் ஒரு பெரிய மரியாதை, இது இந்த முடிவை இன்னும் கடினமாக்குகிறது. "இருப்பினும், 2021 எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை, டோக்கியோவில் எனது சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் நான் இன்னும் தயாராகவில்லை. "வரவிருக்கும் வாரங்களில் கடினமாக உழைத்து, விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் பட்டத்தை வெல்வதும் தான் எனது குறிக்கோள்" என்று டொமினிக் தீம் அறிவித்துவிட்டார். (புகைப்படம்: ட்விட்டர்)