ஆண்கள் காதலிக்கு துரோகம் செய்வது ஏன்? நம்ப முடியாத 8 காரணங்கள்!!

Reasons Why Men Cheat On Their Partner : ஆண்கள் சிலர், காதல் அல்லது திருமண உறவில் இருக்கும் போது தனது பார்ட்னரை தவிர்த்து வேறு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி, தனக்கென இருப்பவருக்கு துரோகம் செய்வர். அது ஏன் தெரியுமா?

Reasons Why Men Cheat On Their Partner :  திருமண உறவாக இருந்தாலும், காதல் உறவாக இருந்தாலும், அது நிலைத்து நிற்க வேண்டும் என்றால் அதற்கு நம்பிக்கை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கும். ஆனால், நமது பார்ட்னர் நமது நம்பிக்கைக்கு உரியவர்தானா எனும் சந்தேகம் பல பெண்களுக்கு எழும். ஒரு சில ஆண்கள், தான் உறவில் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்தி, தனக்கென இருக்கும் ஒருவருக்கு துரோகம் செய்வர். இதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா? 

1 /8

சமூக அழுத்தம்: மனிதர்கள் எப்போதும் தங்களை சுற்றி உலகம் எப்படி இருக்கிறதோ, அதை பார்த்து, அப்படித்தான் நடந்து கொள்வர். ஒருவர் தனது காதலி அல்லது மனைவிக்கு துரோகம் செய்கிறார் என்றால், அவரை சுற்றி இருப்பவர்கள், துரோகம் செய்வதை சாதாரணமாக்கி வைத்திருப்பர். 

2 /8

பழிவாங்குதல்: ஒரு சிலர், தங்கள் பார்ட்னர் ஏதேனும் தவறு செய்து விட்டால் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பினை ஏற்படுத்தி கொள்வராம். 

3 /8

தவறான புரிதல்கள்: சீட்டிங் செய்யும் பலர், தாங்கள் என்ன உணர்கிறோம் என்பதையோ, தங்களுக்குள் அழுத்தம் கொடுக்கும் விஷயங்களையோ வெளியில் கூற தெரியாதவர்களாக இருப்பர். இதனால், அவர்களுக்கு தங்கள் பார்ட்னர் மீது தவறான புரிதல் ஏற்பட்டு, அது துரோகத்திற்கு வழிவகுக்கலாம். 

4 /8

தனிப்பட்ட பிரச்சனை: ஒரு சிலருக்கு மன ரீதியாக சில பிரச்சனை இருக்கும். தன் மீதான குறைவான மறியாதை, முன்னர் ஏற்பட்ட மன வலிகள் ஆகியவற்றால் ஏதேனும் தீரா உணர்வுடன் உலா வருவர். இது போன்றோர் தங்கள் பார்ட்னருக்கு துரோகம் செய்ய வாய்ப்புள்ளது. 

5 /8

வாய்ப்பு: பலருக்கு, தொடர்ந்து துரோகம் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துக்கொண்டே இருக்கலாம். இதை ஒரு நேரம் இல்லை என்றாலும் இன்னொரு நேரம் அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 

6 /8

ஆழமான உறவில் இல்லாதது: ஒரு ஆண், தான் இருக்கும் காதல் உறவில் ஆழமாக இல்லை என்றாலோ, தான் காதலிக்கும் பெண் மீது பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை என்றாலோ வேறு பெண்ணை நோக்கி ஓடுவான். 

7 /8

புதுமை: சில ஆண்கள் புதுமை மற்றும் உற்சாகத்திற்காக தங்கள் பார்ட்னரை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கலாம்.  இதனால் அவர்களின் தற்போதைய உறவுக்கு வெளியே புதிய அனுபவங்களைத் தேடலாம்.

8 /8

உணர்ச்சி இணைப்பு இல்லாமை: ஒரு மனிதன் தனது பார்ட்னரிடம் உணர்ச்சி ரீதியாக ஒட்டுதல் இல்லாமல் உணர்ந்தால், அவன் வேறு இடத்தில் உடல் அல்லது மன ரீதியான நெருக்கத்தைத் தேடலாம்.