மஞ்சள் அருமருந்து தான்... ஆனால் ‘இந்த’ பிரச்சனை இருந்தால் NO சொல்லுங்க!

மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை.. இருப்பினும், மஞ்சள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதில்லை. மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால், சில ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

1 /5

2 /5

பித்தப்பையில் கல் உள்ள நோயாளிகள் மஞ்சளை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.  அடிக்கடி கல் பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள், மஞ்சளை உட்கொள்வதால், இந்த பிரச்சனையை தீவிரபடுத்தும். எனவே, அவர்கள் மஞ்சளின் உண்பதை முடிந்தவரை குறைத்து, அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

3 /5

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மஞ்சளை அதிகமாக உட்கொள்வது உடலில் உள்ள இரத்தத்தின் அளவைக் குறைக்கும். இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்.

4 /5

இரத்தம் உறைதல் செயல்முறையை மஞ்சள் மந்தமாக்குறது. எனவே, திடீரென மூக்கில் அல்லது உடலின் மற்ற பாகங்களில் இருந்து ரத்தம் வெளியேறும் பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சளை உட்கொள்வதை மிகவும் குறைக்க வேண்டும்.

5 /5

மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சள் சாப்பிடக்கூடாது. மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்ட பிறகும், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மஞ்சள் உட்கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்க வேண்டும்.