Roe vs Wade: கருக்கலைப்பு தடை மீதான நீதிமன்ற தீர்ப்புக்கு வலுக்கும் போராட்டம்

கருக்கலைப்பு என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை என சுமார் 50 ஆண்டுக்கு முந்தைய தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததன் எதிரொலியாக மக்களின் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குழந்தைப்பேறு எங்கள் பிறப்புரிமை: பெண்ணடிமைத்தனத்தை ஒழித்திடுக என்ற கோஷங்கள் அமெரிக்காவின் விண்ணை முட்டும் முழக்கங்களாக எதிரொலிக்கின்றன.

1 /5

பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமையை தடை செய்த அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாட்டின் பல்வேறு மாகாணங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். போராட்டத்திற்கு சமூக அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

2 /5

கருக்கலைப்பு செய்வதற்கான அரசியலமைப்பு உரிமை பெண்களிடம் இருந்து பறிக்கப்பட்டதை அடுத்து, மனித உரிமைகள் உணர்வுள்ள மக்கள், ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் வீதியில் இறங்கி  போராடி வருகின்றனர்

3 /5

நீதிமன்றத்தின் கருக்கலைப்பு தொடர்பான முடிவு பெண்கள் மட்டுமல்ல, அமெரிக்க மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் என்றும், நாட்டின் அரசியலுக்கு ஒரு புதிய திசையை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் கிட்டத்தட்ட பாதி மாகாணங்களில் கருக்கலைப்பு செய்வது முற்றிலும் தடை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

4 /5

அமெரிக்காவில் கருக்கலைப்பு தொடர்பான தீர்ப்பை 1973 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கியது. இந்த வழக்கின் பெயர் Roe Vs Wade

5 /5

அந்த வழக்கில், நார்மா மெக்கோர்வி என்ற பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், கர்ப்பமானார். மூன்றாவது குழந்தை தேவையில்லை என்று நினைத்த அவருக்கு கருக்கலைப்பு செய்ய ஃபெடரல் கோர்ட் அனுமதிக்கவில்லை. பிறகு சுப்ரீம் கோர்ட்டை அணுகியபோது அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம், ​​கருக்கலைப்புக்கு அனுமதித்தது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்கு பெண்கள் மட்டுமல்ல, அமெரிக்கா முழுவதும் இருந்து வரவேற்பு கிடைத்தது