தமன்னாவின் காவாலா நடனத்துக்கு காதலர் விஜய் வர்மாவின் ரியாக்ஷன்

காவாலா பாடலில் நெருப்பு ஆட்டம் போட்டிருப்பதாக நடிகை தமன்னாவுக்கு காதலர் விஜய் வர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். 

 

1 /7

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'காவாலா' சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களிடையே பெரும் சாதனைகளை படைத்து வருகிறது.     

2 /7

குறிப்பாக சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்டும் வகையில் இந்த பாடலில் கலகல் நடனத்தை போட்டுவிட்டார் நடிகை தமன்னா.      

3 /7

இதனை பார்த்த தமன்னாவின் காதலன் விஜய் வர்மா தனது காதலியை புகழ்ந்து ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை வெளியிட்டு 'காவாலா'வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்     

4 /7

அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில் " இந்தப் பாடல் தீயாக உள்ளது" என பாராட்டியுள்ளார்.    

5 /7

சமீபத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட நெட்ஃபிக்ஸ் தொடரான 'லஸ்ட் ஸ்டோரிஸ்' இருவரும் இணைந்து நடித்த நிலையில், தாங்கள் காதலிப்பதாக தெரிவித்தனர்.    

6 /7

நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'ஜெயிலர்' படத்திற்கு அனிருத் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.     

7 /7

ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.