Virat Kohli Breaks Record: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் விராட் கோலி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்திருக்கும் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.
இதில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய விராட் கோலி சிறப்பாக ஆடினார்.
34 ரன்கள் எடுத்திருந்தபோது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.
இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதல் இடத்தில் இருந்தார். அவர் 26 போட்டிகளில் 2097 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனை இப்போது விராட் கோலி முறியடித்துள்ளார். அவர் 35 போட்டிகளில் விளையாடி 2101 ரன்கள் எடுத்திருக்கிறார்.
அதிக ரன்கள் எடுத்த இந்தியர்கள் பட்டியலில் 3வது இடத்தில் புஜாரா உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரிஷப் பன்ட் உள்ளார்.
விராட் கோலி இன்னும் 324 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்கள் என்ற சராசரியை அவர் எட்டிவிடுவார்.
இந்த மகத்தான சாதனையும் இப்போது அவருக்கு கிடைக்க இருக்கிறது.
இந்த டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை விராட் வெளிப்படுத்தும்பட்சத்தில் அந்த சாதனையும் இவர் வசம் வந்துவிடும்.