கார் மற்றும் பைக்கை தண்ணீர் கொண்டு கழுவினால் ரூ. 5000 அபராதம்!

இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.  இதனால் தண்ணீரை வீணாகாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

1 /5

கர்நாடகா மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

2 /5

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக நகர் முழுவதும் தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் நீரை சேமிக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.  வாகனங்களை கழுவுவதில் அதிகளவு தண்ணீர் வீணாவதால், தண்ணீர் கொண்டு கழுவ தடை விதிக்கப்பட்டுள்ளது.   

3 /5

மேலேயும் பல விஷயங்களுக்கு தண்ணீரை பயன்படுத்தவும் அரசு தடை விதித்துள்ளது.  வாகனங்களை கழுவுவதற்கும், நீரூற்றுகள் மற்றும் தோட்டக்கலைக்கும் தண்ணீரை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இவற்றை மீறினால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

4 /5

இந்த உத்தரவில், கட்டுமானப் பணிகள், செயற்கை நீரூற்றுகள், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளில் குடிநீர் மற்றும் சாலைகளை சுத்தம் செய்தல் மற்றும் பிற துப்புரவு பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  

5 /5

BWSSB தலைவர் டாக்டர் ராம் வசந்த் மனோகர் கூறுகையில், " நகரில் வெப்பம் அதிகரித்து வருவதாலும், மழை இல்லாததாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மக்கள் தண்ணீரை வீணாக்காமல், சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று கூறி உள்ளார்.