Weekly Horoscope: ஜீன் கடைசி வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் இவை தான்..!!

Weekly Horoscope: ஜூன் கடைசி வாரம், அதாவது ஜூன் 24 முதல் 30 வரை இரண்டு யோகங்கள் சில ராசிகளுக்கு பலனளிக்கப் போகின்றன. இந்த வாரம் சனி தனது ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். 

 

சனியின் வக்ர பெயர்ச்சியினால், இந்த வாரம் ஷஷ ராஜயோகம் வலுவாக செயல்படப் போகிறது. இந்த வார தொடக்கத்தில் சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிப்பதால் சசி யோகமும் உண்டாகும். 

1 /7

வார ராசி பலன்: மிதுனம், கடகம், தனுசு உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தொழில் முன்னேற்றம், ஐஸ்வர்யம், நற்பலன்கள் தரப் போகிறது. மேலும் சனிyஇன் வக்ர பெயச்சி, சந்திரனின் தாக்கத்தால் நிதி நிலை வலுப்பெறும். ஜூன் கடைசி வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

2 /7

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் கடைசி வாரம் சிறப்பான வாரமாக இருக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. அதிர்ஷ்டம் கை கூடி வரும். முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

3 /7

கடக ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தின் கடைசி வாரம் சுபத்தையும் நற்பலன்களையும் தரப் போகிறது. கடந்த காலத்தில் நீங்கள் ஏதேனும் கடன் வாங்கியிருந்தால், இந்த வாரம் அதைத் திருப்பிச் செலுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

4 /7

தனுசு ராசிக்காரர்களுக்கு ஜூன் கடைசி வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாரம்  முழு ஈடுபாட்டுடன் செய்யும் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் தொழிலில் எதிர்பார்த்த லாபத்தையும் பெறுவீர்கள். இந்த வாரம் நீங்கள் மிகவும் அன்பான நபரை சந்திப்பீர்கள். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்கள் உறவு முன்பை விட வலுவாக இருக்கும். 

5 /7

மகர ராசிக்காரர்களுக்கு ஜூன் கடைசி வாரம் வருமானத்தைப் பொருத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் உங்கள் வசதிகள் மற்றும் வீட்டைப் பழுதுபார்த்தல் போன்றவற்றிற்காக நிறைய பணம் செலவழிக்கலாம். தொழிலில் பணத்தை முதலீடு செய்யும் போது, ​​நலம் விரும்பிகளின் ஆலோசனையை கண்டிப்பாக பெறவும். உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வாரத்தை நல்லதாகவும் வெற்றிகரமாகவும் மாற்ற, உங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக கவனித்துக் கொள்ளுங்கள்.

6 /7

மீன ராசிக்காரர்கள் நீண்ட அல்லது குறுகிய தூரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும். பயணம் உங்களுக்கு மிகவும் இனிமையானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். இந்த வாரம், இளைஞர் குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் நேரத்தை சந்தோஷமாக கழிக்கப் போகிறார்கள். இந்த வாரம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்.  நிலம் மற்றும் கட்டிடம் தொடர்பான சட்ட தகராறில் உங்களுக்கு சாதகமாக முடிவு வரலாம். ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.