வேகமா உடல் எடையை குறைக்க.. இந்த பானங்கள் பக்காவா உதவும்

Weight Loss Tips: உடல் பருமன் பலரை பாடாய் படுத்தி வருகிறது. உடல் எடையை குறைக்க மக்கள் பல்வேறு வகையான வைத்தியங்களை பின்பற்றுகிறார்கள். 

 

சில எளிய மற்றும் இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். இயற்கையான வழிகளை பின்பற்றினால், பக்க விளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 

 

1 /9

எடை குறைப்பு: உடலில் உள்ள அதிக எடையை குறைக்க மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஜிம் சென்று பல வித உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள்

2 /9

எளிய வழிகள்: சில இயற்கையான மற்றும் எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி ஒரு எளிய வழியை இந்த பதிவில் காணலாம்.

3 /9

டீடாக்ஸ் பானங்கள்: டிடாக்ஸ் பானங்கள் உடலை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. இவற்றை உட்கொள்வதால் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க முடியும். இவை உடலை நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகின்றன. 

4 /9

எலுமிச்சை தண்ணீர்: எலுமிச்சம்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இது வளர்சிதை மாற்றத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது தவிர, இது வாய் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்கிறது. குறைந்த கலோரி கொண்ட எலுமிச்சை நீரை உட்கொள்வதால், உடலில் சேரும் கூடுதல் கொழுப்பு எரியத் தொடங்குகிறது. 

5 /9

ஓம நீர்: ஓம நீர் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. குடல் இயக்கத்தை மேம்படுத்துவதோடு, சுவாச பிரச்சனைகளையும் இது கட்டுப்படுத்துகிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஓம தண்ணீரைக் குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

6 /9

இலவங்கப்பட்டை நீர்: உணவின் சுவையை அதிகரிக்கும் இலவங்கப்பட்டை, கலோரிகளை எரிப்பதற்கும் உதவுகிறது. பைட்டோநியூட்ரியன்ட்கள் நிறைந்த இலவங்கப்பட்டை பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இதை குடித்தால் வயிற்றில் உள்ள நச்சுப் பொருட்கள் தானாகவே வெளியேறத் தொடங்கும். இது தவிர, உடலில் ஆற்றல் அதிகமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

7 /9

வெந்தய நீர்: கொலஸ்ட்ரால் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், வெந்தய நீர் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த வெந்தய விதைகள் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதை தினமும் உட்கொண்டு வந்தால், உடலில் சேர்ந்துள்ள கூடுதல் கலோரிகள் எரியத் தொடங்கும். 

8 /9

மஞ்சள் நீர்: மஞ்சளில் குர்குமின் உள்ளது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வெதுவெதுப்பான நீரில் மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கவும். இதனை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதால், வயிற்றுப் பிடிப்பு, வீக்கம் மற்றும் கலோரிகள் சேர்வதில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இதனை தொடர்ந்து குடிப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடையும்.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.