வைட்டமின்-சி சத்து அதிகம் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் சருமம் பளபளப்பாக இருக்கிறது மற்றும் உடல் எடையிலும் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
தர்பூசணி சாறு உடல் எடை குறைய மட்டுமல்லாது, உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது, இதில் குறைந்த அளவே கலோரிகள் உள்ளது, இந்த சாறை குடிப்பதால் உங்கள் ரத்த ஓட்டம் சீராகும்.
உடல் எடை குறைப்பதிலும், சரும அழகை மேம்படுத்துவதிலும் சிறப்பாக செயல்படுவது க்ரீன் டீ தான், இந்த பானத்தை பலரும் தங்களது டயட்டில் சேர்த்து கொள்கின்றனர்.
இளநீரில் பொட்டாசியம் அதிகமுள்ளது, மேலும் இது உங்களது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது மற்றும் இது உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
பிளாக் காபி பற்றி பல ஆரோக்கிய நன்மைகளை அறிந்திருக்கிறோம், சர்க்கரை சேர்க்காமல் பிளாக் காபி அருந்தினால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
காலம்காலமாக அழகை பராமரிக்க உதவும் இயற்கை பொருளாக மஞ்சள் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இது சருமத்தை அழகாக்கவும், உடல் எடை இழப்பிலும் உதவுகிறது.