Drumstick: நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் தோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது முருங்கை
முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுகிறது. புரதச் சத்து அதிகம் உள்ள முருகைக்காயின் ஆரோக்கிய நலன்கள்...
முருங்கைக்காயை சாப்பிடுவது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இதில் உள்ள பைட்டோகெமிக்கல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
முருங்கை காய்களில் கால்சியம் அதிகம் இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்கள் இரண்டையும் வலுப்படுத்த உதவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் முருங்கைக்காயை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கிறது.
முருங்கைக்காய் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். பருக்கள் மற்றும் முகப்பரு பிரச்சனைகள் இருந்தால், முருங்கைக்காயின் சதைப் பகுதியை ஃபேஸ் பேக் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் பருக்கள் நீங்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதிலும் முருங்கைக்காய் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை சாப்பிடுவதால் இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது, எனவே இதய நோயாளிகள் கண்டிப்பாக இதை உட்கொள்ள வேண்டும்.
உங்கள் எடை அதிகரித்திருந்தால், முருங்கையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்காயில் உள்ள பாஸ்பரஸ் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது