ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த மாதம் மார்கழி. மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் சொன்ன மந்திரம் மார்கழியின் மகத்துவத்தை புரிய வைக்கப் போதுமானது.
மார்கழி மாதம் ஏன் விசேஷமாக பார்க்கப்படுகிறது? இந்த மாதத்தில் ஏன் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும், திருமணங்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் தவிர்க்க வேண்டும் என்பன பார்ப்போம்...
மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என இறைவனை அடையக் கூடிய இரு பெரிய விழாக்கள் வருகின்றன. மார்கழி மாதம் என்றால் அது பீடை மாதம் என பலர் சொல்வதுண்டு. ஆனால் அப்படி அல்ல அது ஒரு தெய்வீகமான மாதமாகும். அதனால் தான் பகவான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன் என கூறியுள்ளார்...
மார்கழி மாதத்தில் அதிகாலை எழுவது மிகவும் நல்லது. அதிகாலை என்றால் எத்தனை மணி என பலரும் கேட்பார்கள். அதாவது சூரிய உதயத்திற்கு முன் பிரம்ம முகூர்த்தமான 4.30 மணிக்கு எழுந்து நீராட வேண்டும்.
மார்கழி மாதத்தில் பொதுவாக திருமணம் நடத்த மாட்டார்கள். காரணம், இறைவனை வழிபடும் மாதத்தில் திருமணம் செய்வது இறை வழிபாட்டுக்கு உகந்ததாக இருக்காது என்ற எண்ணமே காரணம்.
மார்கழி மாதத்தில் இந்த நேரத்தில் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய அதீத ஆக்ஸிஜன் நம் உடலுக்கு ஆண்டு முழுவதும் தேவையான நலனை தர வல்லது.
மார்கழி மாதம் அதிகாலை குளித்துவிட வேண்டும். சூரிய உதயத்திற்குப் பிறகு குளிக்கக் கூடாது. விடியற்காலையில் நீராடி, நமது பிரார்த்தனைகளை இறைவனின் சரணத்தில் வைத்திட வேண்டும்