WildFires: கலிபோர்னியாவில் வரலாறு காணாத வெப்பம் மற்றும் காட்டுத் தீக்கு 4 பேர் பலி

California WildFires: கலிபோர்னியாவில் வரலாறு காணாத வெப்பம் மற்றும் காட்டுத் தீ சர்வதேச அளவில் கவலைகளை எழுப்பியிருக்கிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வரலாறு காணாத வெப்பநிலைக்கு மத்தியில் காட்டுத் தீ பரவியதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | பூக்களின் மருத்துவ குணங்கள்

1 /5

பற்றி எரியும் காட்டுத்தீயினால் ஏற்பட்ட மோசமான நிலைமையைச் சமாளிக்க மாகாணத்தைச் சுற்றியுள்ள 14 பகுதிகளில் 4,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையின் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். (புகைப்படம்: AFP)

2 /5

பற்றி எரியும் தீயில் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் தீ தடுப்பு மருந்துகளை தெளிக்க விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. (புகைப்படம்: AFP)

3 /5

தீ பரவத் தொடங்கிய உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,584 வீடுகளில் வசிப்பவர்களை வெளியேற அரசு உத்தரவிட்டது. இதுவரை தீக்கு 8 கட்டிடங்கள் இரையாகின... மேலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.   (புகைப்படம்:ராய்ட்டர்ஸ்)

4 /5

அதிகரிக்கும் வெப்பநிலையால் அப்பகுதியில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து. இந்த அதிக அளவு வெப்பமானாது காட்டுத் தீயை ஏற்படுத்தியது

5 /5

"இந்த வெப்ப அலையின் மிக தீவிரமான கட்டத்தில் நாங்கள் இப்போது நுழைந்துள்ளோம்" என்று மாகாணத்தின் மின்சாரத்தை நிவகிக்கும் கலிபோர்னியா இன்டிபென்டன்ட் சிஸ்டம் ஆபரேட்டரின் (ஐஎஸ்ஓ) தலைவர் எலியட் மைன்சர் தெரிவித்தார்.  (புகைப்படம்: AFP)