உலகின் மிக சொகுசு சிறை: சிறையின் பெயரைக் கேட்டாலே கருப்புக் கம்பிகள், இருட்டு அறைகள், மோசமான உணவுகள் போன்ற விஷயங்கள் உங்கள் கண் முன்னே வரும். ஆனால், கைதிகளுக்கு ஆடம்பர வசதிகள் கிடைக்கும் சிறைகளும் உள்ளன. இவற்றின் முன் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கூட ஒன்றும் இல்லை எனலாம்.
ஜெர்மனியில் அமைந்துள்ள JVA ஃபியூஸ்புடெல்சிறையில் (JVA Fuisbutel Prison) வாழும் கைதிகளுக்கு ஆடமபரமான படுக்கை, தனிப்பட்ட குளியலறை, தனிநபர் கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளன. இந்த சிறையில் கைதிகளுக்கு சலவை இயந்திரம், கான்பரென்ஸிங் ரூம் போன்ற வசதிகளும் உள்ளன.
Justice Center Leoben சிறை ஆஸ்திரியாவின் லியோபென் மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கைதிகளுக்கு 5 நட்சத்திர ஹோட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும். இங்கு கைதிகளுக்கு ஜிம், ஸ்பா போன்ற ஆடம்பர வசதிகள் கிடைக்கும். இது தவிர, கைதிகள் உள்ளரங்க விளையாட்டுகளையும் இங்கு விளையாடலாம். கைதிகளுக்கு இங்கு தனிப்பட்ட குளியலறை, லிவிங் ரூம் மற்றும் சமையலறை ஆகியவையும் உள்ளன.
ஸ்காட்லாந்தில் உள்ள HMP சிறையில் கைதிகள் நல்ல மனிதர்களாக மாற அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. கைதிகளுக்கு 40 வாரங்களுக்கு உற்பத்தி திறன் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு, அவர்கள் வெளியே வந்து சிறந்த வகையில் வேலையைச் செய்து நிம்மதியான வாழ்க்கையை நடத்த முடியும்.
சுவிட்சர்லாந்தில் உள்ள Champs-Dollon சிறைச்சாலை ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்காக பிரபலமடைந்தது. இருப்பினும், இன்று இங்கு இருக்கும் கைதிகளுக்கு நல்ல தங்கும் விடுதி போன்ற அறைகள் கிடைக்கின்றன. இது தவிர, கைதிகள் படுக்க திண்டு படுக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்தில் அமைந்துள்ள Otago Corrections Facility சிறையில் கைதிகள் அனைத்து வசதிகளையும் பெறுகின்றனர். இது தவிர விவசாயம், லைட் இன்ஜினியரிங், சமையல் போன்ற பணிகளில் கைதிகளுக்கு பயிற்சி அளித்து திறமையானவர்களாக மாற்றும் வகையில் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.