Godess Durga For Peace: இன்னல்கள் சூழ்ந்திருந்தாலும் அவற்றை இருட்டடிப்பு செய்து நம்மை துக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் அன்னை துர்க்கையை வழிபட்டால் துன்பமெல்லாம் தீரும்! இந்து மதத்தில் அசுரனை கொல்லும் துர்காதேவியை போற்றி வழிபடுவது வழக்கம்...
துர்க்கை அம்மனை வணங்குவது மிகவும் விசேஷமானது. செவ்வாயன்றும், வெள்ளியன்றும் ராகுகால துர்க்கை வழிபாடு அதிக முக்கியத்துவம் பெறுகிறது...
தீயவை அனைத்தையும் தனது கையால் அழிப்பவள் என்ற பொருள்படும் பெயர் தான் துர்க்கை. தீய செயல்களையும் தீயவர்களையும் தனது கையால் அழிக்கும் சக்தி துர்க்கை அம்மன்
அன்னை துர்க்கையை வழிபடும் வழக்கம் இந்தியாவில் பாரம்பரியமானது. அதிலும் வடகிழக்கு இந்தியாவில் குறிப்பாக மேற்கு வங்கத்தில் துர்க்கை அம்மன் வழிபாடு பிரசித்தி பெற்றது
அஷ்டமி தினத்தில் துர்க்கை அம்மனுக்கு அரளி, ரோஜா, செந்தாமரை, செம்பருத்தி போன்ற சிவப்பு வண்ண புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனை செய்யலாம். சிவப்பு நிறம் அம்பாளுக்கு பிடித்தமானது.
துர்க்கைக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி துர்க்கா ஸ்தோத்திரம் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது
வழக்கு விவகாரங்களில் வெற்றி பெற துர்காதேவியை வழிபடுவது நல்லது
ஸ்ரீ துர்கையின் வாகனம் சிம்மம். சிம்மவாகினி துர்க்கையை பூஜித்தால் முக்தி கிட்டும்.
துர்கா தேவிக்கு மிகப்பிடித்த புஷ்பம் நீலோத்பவம். இது எல்லா புஷ்பங்களையும் விட நூறு மடங்கு உயர்ந்தது. இந்த நீலோத்பல மலரை அன்னைக்கு சாற்றி வழிபடுவது நல்லது
ராகு கால துர்க்கை வழிபாடு சிறந்தது. அந்த சமயத்தில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபடலாம்
பொறுப்புத் துறப்பு: இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது