சியோமி தனது புதிய Mi 11 ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்திய ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் இயங்கும் உலகின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் Mi 11 தான். இது 120Hz AMOLED டிஸ்ப்ளே, பிரமாண்டமான பேட்டரி மற்றும் அதிவேக வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது. ஆப்பிளின் ஐபோன் 12 தொடரைப் போலவே, சியோமியும் இதனுடன் சார்ஜரைச் சேர்க்கவில்லை.
வடிவமைப்பைப் பொறுத்தவரை, Mi 11 மிகவும் மெல்லிய மற்றும் இலகுரக வடிவமைப்பைக் கொண்டது. இந்த சாதனம் குறைந்தபட்ச விவரக்குறிப்புகளுடன் சாண்ட்விச் வடிவமைப்பையும் கொண்டுள்ளது, சியோமி லோகோ மற்றும் ஒரு சதுர கேமரா பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது ஹார்மன் கார்டனால் டியூன் செய்யப்பட்ட இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போனில் 6.81 அங்குல 2K AMOLED டிஸ்ப்ளே இடம்பெறுகிறது, இது நான்கு விளிம்புகளிலும் வளைந்திருக்கும். இதன் பேனல் 120 Hz புதுப்பிப்பு வீதத்துடனும் 480 Hz touch sampling rate உள்ளது, இது கேமிங் ஆர்வலர்களுக்கு மிகவும் ஏற்றதாக அமைகிறது.
மேலும், டிஸ்ப்ளே 3200 x 1440-பிக்சல் தெளிவுத்திறன், 1500-நைட்ஸ் வரை உச்ச பிரகாசம், 515-ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 10-பிட், HDR 10+ சான்றிதழைக் கொண்டுள்ளது.
Mi 11 ஆனது 5 nm ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்டால் இயக்கப்படுகிறது, இதனுடன் 12 ஜிபி LPDDR 5 ரேம் மற்றும் 512 ஜிபி வரை UFS 3.1 பில்ட்-இன் ஸ்டோரேஜ் உடன் உள்ளது. ஸ்னாப்டிராகன் 888 என்பது ஆப்பிளின் A14 பயோனிக் சிப்பிற்கு போட்டியாக வருகிறது.
Mi 11 ஆனது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய MIUI 12.5 ஐ இயக்குகிறது. இணைப்பு முன்னணியில், ஸ்மார்ட்போன் இரட்டை பயன்முறை 5 ஜி, வைஃபை 6 ஐ 3.5 Gbps வரையிலான பதிவிறக்க வேகத்துடன் ஆதரிக்கிறது, புளூடூத் 5.2 மற்றும் யூ.எஸ்.பி டைப்-C சார்ஜிங் போர்ட் கீழே உள்ளது.
Mi 11 இல் 4,600mAh பேட்டரி மற்றும் 55W கம்பி சார்ஜிங்கிற்கான ஆதரவு உள்ளது. வயர்டு சார்ஜரைப் பயன்படுத்தி 45 நிமிடங்களில் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று சியோமி பெருமையுடன் தெரிவித்துள்ளது. சாதனம் அதிவேக 50W வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
பின்புறத்தில் உள்ள சதுர கேமரா தனித்துவமானது மற்றும் இது 108MP முதன்மை சென்சார் (f / 1.85 மற்றும் OIS) மூலம் பாதுகாக்கப்படுகிறது. Mi 11 இல் 133 (f / 2.4) அல்ட்ரா-வைட் கேமராவும் 123 டிகிரி FOV, மற்றும் 5MP டெலிஃபோட்டோ மேக்ரோ கேமராவும் அடங்கும்.
டெலிஃபோட்டோ மேக்ரோ கேமரா என்றால் என்ன என்று யோசிக்கிறீர்களா? ரெட்மி கே 30 ப்ரோ (அல்லது உலகளாவிய சந்தைகளில் போகோ F2 ப்ரோ) போனிலும் இந்த சென்சார் முதலில் பொருத்தப்பட்டிருந்தது.
தொலைபேசியை உடல் ரீதியாக நகர்த்தாமல் தூரத்தில் இருக்கும் பொருட்களை Zoom செய்வதன் மூலம் நெருங்கிச் செல்ல உதவுவது தான் இந்த டெலிஃபோட்டோ மேக்ரோ கேமரா.
சீனாவில் 8 ஜிபி + 128 ஜிபி அடிப்படை மாறுபாட்டிற்கான விலை CNY 3,999 (ரூ.44,999) முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி + 256 ஜிபி மற்றும் 12 ஜிபி + 256 ஜிவி வகைகளின் விலை முறையே CNY 4,299 (~ ரூ.48,299) மற்றும் CNY 4,699 (~ ரூ. 52,799) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.