Yoga Asanas For Neck Pain : நம்மில் பலருக்கு கழுத்து வலி இருக்கும். இதிலிருந்து தப்பிக்க சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Yoga Asanas For Neck Pain : யோகா செய்வது, உடலை கச்சிதமாகவும் ஹெல்தியாகவும் வைத்துக்கொள்ள உதவும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், உடலில் இருக்கும் வலிகளை நீக்குவதற்கு கூட யோகா செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? நாற்காலியில் எந்த நேரமு அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், மூட்டை தூக்குபவர்கள் என பலரை பாடாய் படுத்துகிறது கழுத்து வலி. அப்படிப்பட்டவர்கள், கண்டிப்பாக இந்த யோகாசனங்களை செய்து பார்க்கலாம். அவை என்னென்ன தெரியுமா?
கழுத்து வலி என்பது அனைவருக்கும் பொதுவாக வருவதாகும். தலையை ஒரு பக்கமாக சாய்த்து தூங்குவதனால், அடிப்பட்டால், கீழே குணிந்து கொண்டே வேலை பார்த்தால், மூட்டை தூக்குவதனால் என பல்வேறு காரணங்களினால் கழுத்து வலி வரலாம். அதை தீர்க்க சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
விபரீத காரணி: இந்த ஆசனத்தை முழு உடலையும் உபயோகித்து செய்ய வேண்டும். இதை செய்வதால் கழுத்து மற்றும் தோள்பட்டையில் ஏற்படும் வலி நீங்கும். இதனால் மன அழுத்தம் குறையும் என்றும் கூறப்படுகிறது.
புஜங்காசனம்: புஜங்காசனம் உடற்பயிற்சி செய்வதால் மார்பகம் விரிவடைந்து, பின்பக்கம் மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் இருக்கும் வலிகள் நீங்கும். இது, முதுகெலும்புக்கும் வலு கூட்டும் பயிற்சி என கூறுகின்றனர் மருத்துவர்கள்.
பச்சிமோத்தானாசனம்: இந்த யோகாசனத்தை, தரையில் அமர்ந்து கால்களை நீட்டி செய்ய வேண்டும். இதனால், கழுத்து வலி மட்டுமன்றி தோள்பட்டை வலியும் நீங்குமாம். இது, நமது நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தி மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வரவும் உதவுவதாக கூறப்படுகிறது.
மர்ஜாரியாசனா: இந்த ஆசனத்தை, உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள் செய்வர். இதை செய்வதால்கழுத்து வலி மட்டுமன்றி வயிறு தொப்பையும் குறையுமாம். இதை ஆங்கிலத்தில் Cat-Cow Pose என்றும் கூறுவர். இது, கழுத்து வலியை எளிதில் நீக்க உதவும் ஆசனமாகும்.
பாலாசனம்: இது, யார் வேண்டுமானாலும் செய்யக்கூடிய மிகவும் சுலபமான ஆசனமாகும். இது, கழுத்து, முதுகுத்தண்டு மற்றும் தோள்பட்டையில் இருக்கும் அழுத்தத்தை நீக்க உதவும். இதை செய்வதால் கழுத்து வலியும் நீங்கும்.
தோள்பட்டை-கழுத்து ஸ்ட்ரெட்ச்: வழக்கமாக உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு ஸ்ட்ரெட்சிங் செய்வது மிகவும் முக்கியம். அந்த வகையில் தோள்பட்டை மற்றும் கழுத்துக்கு ஸ்ட்ரெட்சிங் கொடுக்கும் பயிற்சிகளுள் ஒன்று இது. இதை செய்வதால் கை-தோள்பட்டையில் ஏற்பட்டிருக்கும் தசை பிடிப்பு நீங்கும். (பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)