இந்தியாவில் ஒரு பிளாட் ஒன்றை வாங்கும் விலையில், ஸ்காட்லாந்தில் ஒரு கிராமத்தையே வாங்கலாம். காரணத்தை அறிந்து கொண்டால், வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.
வீட்டை வாங்கும் போது அது இருக்கும் இடம், அருலில் உள்ள வசதிகள் போன்ற பல விஷயங்களை ஆலோசித்து வாங்குகிறோம். எதிர்மறையான விஷயங்கள் ஏதேனும் கேள்விப்பட்டால், தயக்கம் ஏற்படுவது இயற்கை.
இயற்கை எழில் கொஞ்சும் ஒரு ஸ்காட்டிஷ் கிராமம் விற்பனைக்கு தயாராக உள்ளது. இந்த இடத்தின் அழகைப் பார்த்தால், இப்பொழுதே செல்லத் தோன்றும். இங்கே தனியார் கடற்கரையும் உள்ளது. அழகான பழங்கால மர வீடுகளையும் பார்க்கலாம்
இவ்வளவு வளங்கள் இருந்தும் இந்த ஸ்காட்லாந்து கிராமத்தில் குடியேற யாரும் தயாராக இல்லை. பெர்த்ஷையரில் (Perthshire) உள்ள லோச் டேவின் (Loch Tay) வடக்குக் கரையில் அமைந்துள்ள ஓல்ட் வில்லேஜ் ஆஃப் லாயர்ஸ் (Old Village of Lawers), மக்களின் இதயங்களில் அச்சத்தைத் விதைத்துள்ளது. இங்குள்ள வீட்டு உரிமையாளர்களும் பிரச்சனைகளை சந்திப்பதாக கூறப்படுகிறது.
இந்த கிராமம் லேடி ஆஃப் லாயர்ஸ் (Lady of Lawers)என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கிராமம் எங்கும் பேய் பயம் சூழ்ந்துள்ளது. இங்குள்ள மக்கள் கிரமாத்தில் பேய் உள்ளது என நம்புகிறார்கள்
இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வசித்த ஒருவர் கணித்த விஷயங்கள் சில உண்மையாகிவிட்டன. அவர் கிராமத்தில் பேய்கள் இருப்பது குறித்து கூறியதன் காரணமாக, அந்த அச்சத்தால், கிராமத்தில் வாழ யாரும் தயாராக இல்லை. அனைவரும் வெளியேறி வருகின்றனர். இதன் விளைவாக, கிராமத்தில் உள்ள வீடு மற்றும் நில உரிமையாளர்கள், மலிவான விலையில் விற்கத் தயாராக உள்ளார்.
இந்த கிராமத்தில் வாழ உங்களுக்கு தயாக்கம், அச்சம் ஏதும் இல்லை என்றால், இந்தியாவில் ஒரு பிளாட் வாங்கும் விலைக்கு சமமான தொகையை செலுத்தி கிராமத்தையே வாங்கலாம். 3.31 ஏக்கர் நிலத்தின் விலை £125,000 அதாவது 1.29 கோடி. கடைசியாக 2016 ஆம் ஆண்டில், இந்த கிராமம் £100,000 என்ற தொகைக்கு அதாவது ஒரு கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.