உடலுக்கு மிகவும் முக்கியமானது ரத்தம். ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் சில சிகிச்சைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. தற்போது, ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் இரத்த சிவப்பணுக்கள் மனிதர்களுக்கு பொருத்தப்படும் ஆய்வு முக்கியமானது. அந்த ஆய்வில் உருவாக்கப்பட்ட இரத்த அணுக்கள் நன்கொடையாளர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்பட்டன, அவை சிலருக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட ஆய்வுகள் வெற்றிகரமாக இருந்தால், ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தமாற்ற செயல்முறையைத் தொடங்க, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட சிவப்பணுக்கள் பயன்படுத்தப்படும்.
தலசீமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆய்வகத்தால் வளர்க்கப்படும் இரத்த அணுக்கள் சில சிகிச்சைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. புதிய வகையான இரத்தத்தை வெற்றிகரமாக தயாரிப்பது மருத்துவ அறிவியலுக்கு ஒரு முக்கிய படியாக இருக்கும்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்! புற்றுநோயைத் தடுக்கும் நாட்டுக் கத்திரி
விஞ்ஞானிகள் முதல் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் மேலும் கண்டுபிடிப்புகளை முன்னெடுத்துள்ளனர். இரத்த அணுக்கள் ஒரு ஆய்வில் தன்னார்வலர்களுக்கு மாற்றப்பட்டன, மேலும் இது விஞ்ஞானிகளுக்கு அவர்களின் ஆயுட்காலம் மற்றும் பொருந்தக்கூடிய காரணிகளைப் புரிந்துகொள்ள உதவும்.
இரத்த அணுக்கள் நன்கொடையாளர்களிடமிருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கப்பட்டதாக, சிவப்பு அணு தயாரிப்புகளில் NIHR இரத்த மற்றும் மாற்று சிகிச்சை பிரிவின் இயக்குனர் ஆஷ்லே டோய் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகள் வெற்றிகரமாக இருந்தால், தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தமாற்ற செயல்முறையைத் தொடங்கலாம். அவர்களின் சிகிச்சைக்கான இரத்தம் தயாராக இருக்கும். "இந்த சவாலான மற்றும் அற்புதமான சோதனையானது ஸ்டெம் செல்களில் இருந்து இரத்தத்தை தயாரிப்பதற்கான ஒரு பெரிய படியாகும்."
மேலும் படிக்க | Uric Acid அதிகம் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள்
"அலோஜெனிக் நன்கொடையாளரிடமிருந்து ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இரத்தம் மாற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும், மேலும் மருத்துவ பரிசோதனையின் முடிவில் செல்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறோம்" என்று ஆஷ்லே டோய் தெரிவித்ததாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
விஞ்ஞானிகள் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட இரத்தத்தின் அளவு 5 முதல் 10 மில்லிலிட்டர்களுக்கு இடையில் உள்ளது மற்றும் நன்கொடையாளர்களுக்கு எந்த நோய்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
"உலகிலேயே முதன்முறையாக நடத்தப்படும் இந்த சோதனை வெற்றியடைந்தால், தற்போது வழக்கமான நீண்ட கால இரத்தமாற்றம் தேவைப்படும் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சிகிச்சைகளில் மிகவும் உன்னதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ