கனா திரைப்படத்தின் 'ஊஞ்சலா ஊஞ்சலா' பாடல் வெளியானது!

கனா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஊஞ்சலா ஊஞ்சலா' பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 27, 2018, 06:37 PM IST
கனா திரைப்படத்தின் 'ஊஞ்சலா ஊஞ்சலா' பாடல் வெளியானது!
Screengrab (Youtube)

கனா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஊஞ்சலா ஊஞ்சலா' பாடலின் லிரிக்கெல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக தயாரிப்பாளராக மாறி, தனது கல்லூரி நண்பர்களில் ஒருவரான அருண்ராஜா காமராஜை இயக்குநராகவும், மற்றொருவரான திபு நினன் தாமஸை இசையமைப்பாளராகவும் அறிமுகம் செய்திருக்கும் திரைப்படம் `கனா'. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், ஐஷ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ளார். 

அவருக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை என்னும் பாசப்போராட்ட கதையினை படக்குழுவினர் கையில் எடுத்துள்ளனர்.

முன்னதாக இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஊஞ்சலா ஊஞ்சலா' பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்பாடலினை சித் ஸ்ரீராம், நிரஞ்சனா ரமணன் ஆகியோர் பாடியுள்ளார். மோகன் ராஜன் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார்!