WOW!! ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தாவின் ஆடம்பரமான திருமண அழைப்பிதழ்!!

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Feb 14, 2019, 11:22 AM IST
WOW!! ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா மேத்தாவின் ஆடம்பரமான திருமண அழைப்பிதழ்!! title=

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழ் கண்ணை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. இவர்களுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகின் பல தலைவர்களுக்கும் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் ஆகாஷ் அம்பானி-ஷ்லோகா மேத்தா திருமணம், மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற உள்ளது

இந்நிலையில் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரின் திருமண அழைப்பிதழ்களின் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்த அழைப்பிதழ்களில் ‘சூரிய தேவனே, நீயே எங்கள் ஆகாஷின் ஒளி, எங்கள் ஒவ்வொரு ஷ்லோகாவிற்குள்ளும் நீங்களே பிரகாசிக்கிறீர்கள்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

இதற்கு அடுத்து ராஜ அலங்காரத்தில் இருக்கும் விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக மணமக்கள் பெயர் தாங்கிய கார்டு ஒன்று, முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதியின் அழைப்பு கடிதத்துடன் சேர்ந்து  உள்ளது. 

 

 

Trending News