விராட் - அனுஷ்கா திருமணத்திற்கு வருத்தப்பட்ட பாலிவுட் நடிகை!

இனி நான் என்ன செய்வேன் வீரட், என்னை விட்டு அனுஷ்காவை திருமணம் செய்துகொண்டாயே?

Last Updated : Dec 13, 2017, 04:52 PM IST
விராட் - அனுஷ்கா திருமணத்திற்கு வருத்தப்பட்ட பாலிவுட் நடிகை! title=

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். 

4 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இத்தாலியில் உள்ள மிலன் நகர் அருகே டஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் திருமணம் நடந்தது. 

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள். இந்த தகவலை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் டிவிட்டரில் தெரிவித்தனர்.

இந்த தகவல் வைரலாக பரவியது. இந்தியா முழுவதிலும் இருந்து இவர்களுக்கு வாழ்த்து செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில் பாலிவுட் கவர்ச்சி புயல் ராக்கி ஷாவத் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவினில் இவர், "இனி நான் என்ன செய்வேன் வீரட், என்னை விட்டு அனுஷ்காவை திருமணம் செய்துகொண்டாயே?" என கேட்டு பதிவிட்டுள்ளார்.

Trending News