சிறையில் இருந்து பெண் போல வேடமிட்டு தப்ப முயன்றவர் மாட்டிக்கொண்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது!!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், சிறையில் இருந்து பெண் போல வேடமிட்டு தப்ப முயன்றவர் மாட்டிக்கொண்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.
பிரேசில் நாட்டை சேர்ந்த 49 வயதுடையவர் கிளாவினா டா சில்வா. இவரை போதை பொருள் கடத்தல் வழக்கில் காவலதுறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், அவருக்கு எப்படியாவது சிறையை விட்டு வெளியே சென்று விட வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார்.
இந்நிலையில், வாரந்தோறும் தன்னை வந்து பார்க்கும் தனது மகளை வைத்து இதை செய்யலாம் என முயற்சி செய்துள்ளார். அவர் தன் மகள் போலவே வேடமிட்டு தப்பிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக தன் மகள் போலவே முகமுடி, தலை முடி, உடைகளை சிறையில் உள்ள தன் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கியுள்ளார். தனது மகள் வந்த நாளான்று தனது மகள் போலவே வேடமிட்டு அவர் அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார்
ஆனால், அவரது நடை மற்றும் முகத்தில் தெரிந்த மாற்றத்தால் சந்தேகமடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தில் சில்வா தான் முகமுடி அணிந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்றது சிறை காவலர்களுக்கு தெரிந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் அவரை மீண்டும் பிடித்து சிறையில் அடைத்துவிட்டனர். அவர் தனது மகள் போன்ற வேடத்தை போலீசார் முன்பு கலைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
A gang leader in Brazil attempted an escape from prison by dressing up as his daughter when she visited him. He exited jail in her place and was stopped for “looking suspicious”.
Ya think? pic.twitter.com/lvlWePcdOp
— Rex Chapman (@RexChapman) August 4, 2019