சிவகார்த்திகேயனின் #SK13 திரைப்படத்தில் இணைந்தார் ஆதி!

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK13 திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

சிவகார்த்திகேயனின் #SK13 திரைப்படத்தில் இணைந்தார் ஆதி!
Pic Courtesy: twitter/@StudioGreen2

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK13 திரைப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்தப்படத்திற்கான படப்பிடிப்பினை துவங்கியுள்ளார். தற்போது இயக்குனர் 
பொன்ராம் இயக்கத்தில் ‘சீம ராஜா’ என்னும் திரைப்படத்தின் வேலைகளில் பிஸியா வளம் வரும் இவர், இதனையடுத்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

சயின்ஸ் பிக்ஷனாக உறுவாகும் இப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் ரஜேஷ் இயக்கத்தில் பெயர் சூட்டப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தன் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.

ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ‘சீம ராஜா’ முடிந்தபிறகு ரவிக்குமார், எம்.ராஜேஷ் இயக்கும் படங்களில் ஒரே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் காமெடி நடிகர் சதீஷ் நடிப்பது முன்னதாக உறுதி படுத்தப்பட்டுள்ளது. எனினும் படத்தின் நாயகி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. நாயகியாக நயன்தாரா நடிப்பார் என சினிமா வட்டாரங்கள் தெரவிக்கின்றன.