ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு பள்ளி பேருந்தில் படுத்திருந்த மலைப்பாம்பு... வைரல் வீடியோ!

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி பேருந்தில் மறைந்திருந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்ட வீடியோ வைரலாகி வருகிறது.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 16, 2022, 11:41 PM IST
  • ஒரு மணிநேரமாக போராடி மலைப்பாம்பை மீட்டனர்.
  • மீட்கும்போது, அவர்கள் வைத்திருந்த சாக்கின் மீது அந்த பாம்பு பாய்ந்துள்ளது.
  • பள்ளி விடுமுறை என்பதால் நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு பள்ளி பேருந்தில் படுத்திருந்த மலைப்பாம்பு... வைரல் வீடியோ! title=

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் பள்ளி பேருந்தில் பதுங்கியிருந்த மாலை பாம்பை ஒருமணிநேரம் போராடி மீட்டனர். அதை மீட்கும் வீடியோ தற்போது பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது. 

ஒரு சர்வதேச பள்ளியைச் சேர்ந்த அந்த பேருந்தில் உள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். 

தகவல் அறிந்து வந்த அவர்கள் பாம்பை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சீட்டிற்கு அடியில் புகுந்த பாம்பை, அவர்கள் குச்சியை பயன்படுத்தி அடித்தபோது, அவர்கள் பாம்பை பிடிக்க வைத்திருந்த சாக்குப்பையை அந்த மலைப்பாம்பு பிடிக்க பாய்ந்தது. தொடர்ந்து, இன்ஜினுக்கு அடியிலும் சென்று மறைந்துகொண்டது. 

மேலும் படிக்க | Viral Video: நாய்க்குட்டியை கட்டி அணைக்கும் பூனை; இணையத்தை கலக்கும் வீடியோ!

கயிற்றை பாம்பின் உடம்பில் கட்டி, மெதுவாக வெளியே எடுத்து ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அதை மீட்டனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் காயமும் ஏற்படவில்லை. 

விடுமுறையால் பேருந்து, பள்ளி வளாகத்தில் ஓரமாக நிற்க வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு, அந்த பேருந்தில் ஏறியதை பார்த்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். 

அவர்கள் பள்ளி நிர்வாகிகளிடம் தகவல் அளித்த பின்னரே, பேருந்தை வளாகத்தில் இருந்து வாசலுக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.   

மேலும் படிக்க | நடுரோட்டில் காலதனை வெளுத்து வாங்கிய காதலி: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News