Video: இணையத்தில் வைரலாகும் ‘கண்ணு தங்கோம்’ பாடல்...

மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணு தக்கோம் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Updated: Nov 17, 2019, 08:02 PM IST
Video: இணையத்தில் வைரலாகும் ‘கண்ணு தங்கோம்’ பாடல்...
Screengrab

மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா நடிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணு தக்கோம் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் மற்றும் பலர் நடிக்க தனா இயக்குகிறார். இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைத்து வருகின்றார்.

சென்னை, திருநெல்வேலி, குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் படத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தலைப்பு வெளியான நிலையில், அடுத்ததாக முதல்பார்வை போஸ்டரை 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அந்த வகையில் கடந்த 13-ஆம் தேதி இத்திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணு தங்கோம் பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதேவேளையில், இரண்டாவது பாடல், டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி கட்ட பணிகள் முடிந்து இத்திரைப்படம் வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.