பாலிவுட்-ல் கால் பதிக்கும் தனுஷ் திரைப்பட நாயகி!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்பட நாயகி மேகா ஆகாஷ் தற்போது பாலிவுட்டில் 'சேட்டிலைட் சங்கர்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார்!

Last Updated : Sep 30, 2018, 02:15 PM IST

Trending Photos

பாலிவுட்-ல் கால் பதிக்கும் தனுஷ் திரைப்பட நாயகி! title=

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்பட நாயகி மேகா ஆகாஷ் தற்போது பாலிவுட்டில் 'சேட்டிலைட் சங்கர்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார்!

தெலுங்கில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான நித்தினின் ‘லை’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். இதனையடுத்து ‘சல் மோகன் ரங்கா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இதனைத்தொடர்ந்த தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த அவர் நடிகர் தனுஷ், இயக்குநர் கொதம் வாசுதேவ் மேனன் கூட்ணியில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

வரும் திபாவளிக்கு இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து தமிழில் காளிதாஸ் ஜெயராம் உடன் ‘ஒரு பக்க கதை’, ரஜினிகாந்தின் ‘பேட்ட’, அதர்வாவின் ‘பூமராங்’, சிம்பு - சுந்தரி சி கூட்டணியில் தயாராகும் (‘அட்டாரிண்டிகி தாரேடி’ ரீமேக்) ஆகிய படங்களில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவர் பாலிவுட் திரைப்படமான சேட்டிலைட் சங்கர் என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மேகா ஆகாஷ் தனது ட்விட்டர் பக்கதில் குறிப்பிட்டுள்ளதாவது...

சேட்டிலைட் சங்கர் திரைப்படத்தில் ஹீரோவாக சூரஜ் பஞ்சோலி நடிக்கிறார். இர்ஃபான் கமல் இப்படத்தினை இயக்குகிறார். விரைவில் இப்படத்தின் படபிடிப்பு துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Trending News