‘60 வயது மாநிறம்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது!

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘60 வயது மாநிறம்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2018, 05:44 PM IST
‘60 வயது மாநிறம்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது! title=

இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள ‘60 வயது மாநிறம்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியானது!

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, இந்துஜா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ’60 வயது மாநிறம்". பல வெற்றிப் படங்களைக் கொடுத்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக இப்படத்தின் ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தினை தூண்டியுள்ளனர். காரணம், தந்தையினை தொலைத்து பரிதவிக்கும் மகனாக விக்ரம் பிரபுவும், தன்னை அறியாத நிலையில் வாழும் தந்தையாக பிரகாஷ் ராஜூம் இப்பட்டதில் வாழ்ந்திருப்பது ட்ரைலரின் வாயிலாகவே தெரிகிறது.

இப்படமானது சமீபத்தில் தனிக்கை குழுவிடம் இருந்து U சான்றிதழ் பெற்றுள்ள நிலையில் இம்மாதம் இறுதியில்(ஆகஸ்ட 31) வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Trending News