காலா படத்தின் "செம்ம வெயிட்டு" பாடல் வீடியோ இன்று ரிலீஸ்!

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள காலா திரைப்படத்தின் இசை வரும் மே 9-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் இப்படத்தில் வரும் செம்ம வெயிட்டு என்ற பாடலை மட்டும் இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

Last Updated : May 1, 2018, 09:24 AM IST
காலா படத்தின் "செம்ம வெயிட்டு" பாடல் வீடியோ இன்று ரிலீஸ்! title=

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள காலா திரைப்படத்தின் இசை வரும் மே 9-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் இப்படத்தில் வரும் செம்ம வெயிட்டு என்ற பாடலை மட்டும் இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார்.

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இசை வரும் மே 9-ஆம் நாள் வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இப்படத்தில் வரும் செம்ம வெயிட்டு என்ற பாடலை மட்டும் மே 1 (இன்று) இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

முன்னதாக காலா படத்தின் சேட்டிலை உரிமத்தினை ஸ்டார் குழுமம் பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

#காலா... இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

முன்னதாக, ஏப்ரல் 27-ஆம் நாள் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்... கடந்த மார்ச் 1 முதல் திரைப்பட தயாரிப்பாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது!

Trending News