Lakshmi Kuber Pooja On Diwali: சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில் செய்யும் லட்சுமி குபேர பூஜையின் மூலம் அனைத்து செல்வங்களையும் பெற முடியும். செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். உன்னதமான தீபாவளி திருநாளன்று இந்த பூஜை செய்வது பாரம்பரியமாக தொடரும் வழக்கம் ஆகும். மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி, தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறாள். தீபாவளி தினத்தின் மாலை 6 மணிக்கு முன்பே லட்சுமி குபேர பூஜை செய்யவேண்டும்.
வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மகாலட்சுமியின் திருவருளால், தனம், தானியம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்துவிதமான செல்வங்களையும் பெறலாம்.
குறைவற்ற செல்வம் வழங்கும் குபேர பூஜை
செல்வத்துக்கு அதிபதியான குபேரர், சிறந்த சிவ பக்தர் ஆவார். அவர், இந்திரனுக்கு இணையாக புஷ்பக விமானத்தில் பயணித்த பெருமை பெற்றவர். சிவனின் அருள்பெற்று அளகாபுரிக்கு அரணாக விளங்கிய குபேரன் வடதிசைக்கு அதிபதியாகவும் திகழ்கிறார். தாமரை மலர் மீதுள்ள ஆசனத்தில் அமர்ந்திருக்க, அவரது இருபுறமும் சங்க நிதி, பதும நிதி, என்ற தன தேவதைகள் வீற்றிருக்கின்றனர்.
குபேரனின் அருகே இரத்தினங்களை உதிரும் கீரிப்பிள்ளை இருக்கும். குபேரனை மகாலட்சுமியுடன் இணைந்து, தீபாவளி நாளன்று பூஜை செய்வதன் மூலம் குறைவற்ற செல்வநிதியை அவர் வாரி வழங்குவார்.
மேலும் படிக்க | சூரிய கிரகணம் 2022: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நினைத்தது நடக்கும்
லட்சுமி குபேர பூஜை செய்யும்முறை
லட்சுமி குபேர பூஜையை, கலசம் வைத்து வேத மந்திரங்கள் ஓதி செய்வது வழக்கம். ஆனால், இப்படி விமரிசையாக இன்று ஆலயங்களில் மட்டுமே செய்யப்படுகிறது.வேண்டும். வீட்டில், தீபாவளி நாளன்று செய்யும் லட்சுமி குபேர பூஜையில், லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்றி வழிபட்டால் போதும்.
லட்சுமி மற்றும் குபேரனின் படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை பரப்பி வைத்து, நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் தேங்காய் வைத்து கலசமாக மாற்ற வேண்டும்.
மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை செய்யலாம். விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரங்கள் (அ) “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் அல்லது பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலரான தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு ஆகும்.
மேலும் படிக்க | தலை தீபாவளி கொண்டாடும் நயன் விக்னேஷ் தம்பதிகள்! குழந்தைகளுடன் வெளியிட்ட முதல் வீடியோ
கீழ் காணும் மந்திரங்களை சொல்லி வணங்கினால் குபேரனின் அருள் பூரணமாக கிடைக்கும். ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேராய ஐஸ்வர்யாய குபேர ராஜாய சங்க ரூபாய வியாபார வ்ருத்திம் குரு குரு ஸ்வாஹா! ஓம்க்லீம் ஸ்ரீம் குபேராய தனாகர்ஷணாய தனராஜாய மம வ்யாபார ஸ்தலே தனங்ருத்திம் குரு ஸ்வாஹா! ஓம் ஸ்ரீ வர்ரீம் க்லீம் ஐம் ஓம் தனதான்யாய க்லீம் நமோ குபேர ராஜ யட்சேசாய அஸ்ய யஜமானஸ்ய வ்யாபார அனுகூலம் வர்தய வர்தய ஸ்வாஹா...
ஏதேனும் ஒரு இனிப்பு நைவேத்தியம் செய்யலாம். பூஜையில் தட்சணையாக காசுகள் வைக்கப்பட வேண்டும். பூஜை முடிந்தவுடன் காசை எடுத்து வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். லட்சுமி குபேர பூஜையை, தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்…
தன்னிடம் இருக்கும் செல்வ வளத்தை மற்றவர்களுக்கும் அடியவர்களுக்கும் வரமாக வழங்கும் வரத்தை குபேரனுக்கு அருளியவள் அன்னை லட்சுமி ஆவார். குபேரனே வழிபடும் லட்சுமியை வணங்கினால் குபேரனும் மனம் மகிழ்வார். லட்சுமியை வழிபட்டபிறகு குபேரனை வழிபடுவது இந்த பூஜையின் விதிகள் ஆகும்.
மேலும் படிக்க | சுக்கிரனின் மாளவ்ய யோகத்தால் தீபாவளியை ஜாலியாக கொண்டாடும் ராசிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ