இடம் மாறும் சூரியன்! ‘இந்த’ 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது!

சூரியன், தனுசு ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் சில ராசிகளுக்கு செல்வ மழை பொழிய வாய்ப்புகள் இருக்கிறது. அவை என்னென்ன ராசிகள் தெரியுமா?

Written by - Yuvashree | Last Updated : Dec 8, 2023, 08:15 PM IST
  • தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்க உள்ளார்.
  • இதனால் 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகிறது.
  • அது என்னென்ன ராசிகள் தெரியுமா?
இடம் மாறும் சூரியன்! ‘இந்த’ 5 ராசிகளுக்கு பண மழை கொட்டப்போகுது!  title=

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசிகளை விட்டு மாறி வேறு ராசிக்கு மாறுவது அந்த ராசி உடையோரின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக நம்ப்பப்படுகிறது. இந்து மதத்தின் நாள்காட்டியை வைத்து பார்க்கும் போது, சூரியன், டிசம்பர் 16ஆம் தேதி தனுசு ராசிக்கு மாற இருக்கிறார். பல ஆண்டுகள் கழித்து தனுசு ராசியில் சூரியல் இடம் பெயர உள்ளார். இது, பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இதனால் சில ராசிகளுக்கு பண மழை கொட்ட உள்ளது. அவை என்னென்ன ராசிகள்? தனுசு ராசிக்கு சூரியன் இடம் பெயருவதால் அவர்களின் வாழ்வில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்னென்ன? இங்கு பார்க்கலாம்.

மேஷம்

சூரியனின் இட மாற்றத்தால் மேஷ ராசியுடையோர் தங்களது தொழிலில் எதிர்பார்த்த வெற்றிகளை பெற உள்ளனர். இவர்களுக்கு இதனால் தங்களது சமூக வட்டாரத்தில் உயரிய மரியாதை கிடைக்கும். பல நாட்களாக உங்களுக்கு கொடுக்கப்படாமல் இருந்த பணம், உங்களை தேடி வந்து சேரும். இது தவிர, தொழில் ரீதியாக பதவி உயர்வுகள் கிடைக்கலாம். மேலும், சிலருக்கு திருமண யோகமும் அமைந்துள்ளது. 

மிதுனம்:

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு வர இருக்கும் காலங்களில் ராஜ மரியாதையும் அரச வாழ்க்கையும் கிடைக்கும். ஏற்கனவே திருமண வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு இனிமையான தருணங்கள் உண்டாகும். உங்களுடனே இருந்த உறவுகள் முன்பை விட வேகமாக வலுவடையும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். பல வகைகளில் பண வரவுகளும் இவர்களை தேடி வந்து சேர உள்ளது. 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு ராஜ லக்ன யோகம் இருக்கிறது. இதனால், இவர்களுக்கு வரும் வருடம் முழுவதும் பணத்தட்டுப்பாடு இல்லாமல் செல்ல வாய்ப்பிருக்கிறது. தொழில் ரீதியாக திட்டங்கள் தீட்டி வருபவர்கள் அதை அமல்படுத்தினால் லாபம் பார்க்க வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு சமூக அந்தஸ்து கூடும். 

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வரும் ஆண்டு நம்பிக்கை தரும் ஆண்டாக இருக்கும். புதிய தொழிலில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. விரைவில் இவர்களின் குடுமபத்தில் நல்ல நிகழ்வுகள் நடைபெறவும் அதிக வாய்ப்புகள் உண்டு. புதிய வழியில் வருமானம் வருவதற்கு வாய்ப்புண்டு. 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு பல அதிர்ஷடங்கள் வாயிற்கதவை வந்து தட்ட வாய்ப்புண்டு. வியாபார வளர்ச்சி, பதவி உயர்வு, எடுத்த காரியங்களில் வெற்றி என அதிர்ஷ்ட மழை அடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு அவர்களின் நலனில் முன்னேற்றம் ஏற்படும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News