India vs New Zealand 3rd T20: மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில், இன்று அகமதாபாத்தில் உள்ள மோட்டேராவில் நடைபெறும் கடைசி டி20 போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் நடந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது ஆனால் 99/8 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இருப்பினும், 100 ரன்களைத் அடிப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தனர். கடைசியில் ஒரு பந்து மீதம் இருக்க இந்தியா வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | திடீர் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே வீரர்! காரணம் ஏன் தெரியுமா?
Finale Ready@GCAMotera | #TeamIndia | #INDvNZ pic.twitter.com/jXhfMu24LK
— BCCI (@BCCI) January 31, 2023
மூன்றாவது டி20க்கு முன்பு, விளையாடும் அணியில் சில மாற்றங்களை செய்ய உள்ளார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்-லில் மும்பை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு விளையாடியதை தொடர்ந்து பிரித்வி ஷாவுக்கு இந்தத் தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு அழைப்பு வந்தது. ஐபிஎல் 2022ல், ஷா இந்த சீசனில் ஒன்பது இன்னிங்ஸ்களில் 193 ரன்களை எடுத்தார், இது இந்திய அணியில் உள்ள பேட்மேன்களை விட அதிகம் ஆகும். இருப்பினும், கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரை இந்தத் தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கினார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர்.
— BCCI (@BCCI) January 31, 2023
2வது டி20ல் மிஸ் ஆனா உம்ரான் மாலிக், விரைவாக விக்கெட்களை எடுத்து கொடுக்க மீண்டும் அணியில் இடம் பெறலாம். 2வது போட்டியில் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் உம்ரானுக்குப் பதிலாக யுஸ்வேந்திர சாஹல் அணியில் இடம்பிடித்தார். அகமதாபாத் விக்கெட்டை வேகத்திற்கு கை கொடுக்கும் என்பதால் இவர் இடம் பெற வாய்ப்பு உள்ளது. 2023 ஆம் ஆண்டில், உம்ரான் இந்தியாவுக்காக இதுவரை அதிக டி20 விக்கெட்டுகளை (7) எடுத்துள்ளார்.
கணிக்கப்பட்ட பிளேயிங் XI
இந்தியா: சுப்மான் கில், பிருத்வி ஷா, ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்
நியூசிலாந்து: ஃபின் ஆலன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர்
மேலும் படிக்க | Hardik Pandya: லக்னோ பிட்ச் குறித்து பாண்டியா அதிருப்தி..! பிசிசிஐ மீது சாப்ட் சாடல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ