சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 2தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனைகள்

ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியல் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் இரு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 28, 2022, 12:02 AM IST
  • சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 2 தங்கம்
  • 52 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் தங்கம்
  • 48 கிலோ எடைப் பிரிவில் நிது தங்கம் வென்றார்
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 2தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனைகள் title=

புதுடெல்லி: பல்கேரியாவின் சோபியாவில் நடந்த 73வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் தங்கம் வென்றார்கள். 52 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் தங்கம் வென்ற நிலையில், 48 கிலோ எடைப் பிரிவில் நிது தங்கம் வென்றார்.

முன்னாள் இளைஞர் உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கம் வென்ற இத்தாலியின் எரிகா பிரிசியான்டாரோவை 5-0 என்ற கணக்கில் நிது வென்றார். ஜரீன், மூன்று முறை ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற உக்ரைனின் டெட்டியானா கோப்பை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

ஹைதராபாத்தை சேர்ந்த ஜரீன், பல முறை தேசிய பதக்கம் வென்றவர், ஸ்ட்ராண்ட்ஜா மெமோரியலின் 2019 பதிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றார்.

 

sports

நிது, இரண்டு முறை இளைஞர் உலக சாம்பியன் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார்.  ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

21 வயதான இவர் ஹரியானாவின் புகழ்பெற்ற இந்திய குத்துச்சண்டையின் (Indian sports) தொட்டிலான பிவானியின் தனனா கிராமத்தைச் சேர்ந்தவர்.

இளைஞர் குத்துச்சண்டைக்கு, தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்ட நிது, தனது மாநில அரசாங்க வேலையிலிருந்து ஊதியம் இல்லாமல் மூன்று வருட விடுப்பு எடுத்து பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படத் தொடங்கியபோது அவர் சண்டிகரில் மீண்டும் பணியில் சேர்ந்தார்.

மேலும் படிக்க | டி-20 3வது போட்டியில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி  

ஆடவர் அணியின் செயல்திறன் இம்முறை குறைவாகவே இருந்தது, போட்டியில் இருந்த ஏழு பேரில் யாரும் பதக்கச் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை.

இந்தப் போட்டியில் கஜகஸ்தான், இத்தாலி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் உக்ரைன் உட்பட 36 நாடுகளைச் சேர்ந்த 450 குத்துச்சண்டை வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா ராணுவம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக மற்ற ஐபிஎல் அணிகள்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News