2017-ம் ஆண்டுக்கான, 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது.
இந்த ஐபிஎல் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 60 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியாவின் 10 நகரங்களில் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற உள்ளன. இதுவரை ஒன்பது ஐபிஎல் போட்டிகள் முடிந்துள்ளன. ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கியது.
1990களில் இந்திய கிரிக்கெட்டை கலக்கிய சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன் உள்ளிட்ட ஜாம்பவான் கிகரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடக்க விழாவில் மரியாதை கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
The original #IPL iconic players are here to kickstart the proceedings - @sachin_rt @VVSLaxman281 @SGanguly99 @virendersehwag pic.twitter.com/eFdD8TkCll
— IndianPremierLeague (@IPL) April 5, 2017
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.