ஐ.எஸ்.எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து மூன்றாவது சீசன் போட்டி அக்டோபர் 1-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன.
சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் ஆகும்.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
கோவாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோவா 1-0 என முன்னிலை வகித்தது. ஆனால் முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா வெற்றி பெற்றது. கேரளா அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.
இன்று மும்பை சிட்டி எப்சி - அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
.@KeralaBlasters jump up to 5th in the #HeroISL after their thrilling victory against @FCGoaOfficial. #GOAvKER #LetsFootball pic.twitter.com/GeVBTwymmI
— Indian Super League (@IndSuperLeague) October 24, 2016