உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019; 22-வது லீக் ஆட்டத்தில் இந்தியா 336 ரன்கள் குவித்துள்ளது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019; இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 22-வது லீக் ஆட்டம் இன்று மான்செஸ்டர் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி 336 ரன்கள் குவித்தது.
A Rohit Sharma masterclass helps India to a score of 336/5 at the end of their 50 overs!
Who are you backing to win this one?#CWC19 | #INDvPAK pic.twitter.com/lPUTMtDfMQ
— ICC (@ICC) June 16, 2019
அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 140(113) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக விராட் கோலி 77(65), KL ராகுல் 57(78) ரன்கள் குவித்தனர். இதன் காரணமாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் மொகமது அமிர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கிடையில் ஆட்டதின் 46-வது ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டது. பின்னர் மீண்டும் துவங்கியது குறிப்பிடத்தக்கது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகேந்திர சிங் தோனி 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது.