விமான நிலையத்தில் ரசிகர்களுடன் ஸ்னாப் எடுத்த விராட் கோலி

Last Updated : Sep 7, 2017, 07:12 PM IST
விமான நிலையத்தில் ரசிகர்களுடன் ஸ்னாப் எடுத்த விராட் கோலி title=

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. டி-20 கிரிக்கெட் போட்டியை 1-0 கணக்கில் இந்தியா வென்றது.

இலங்கைக்கு எதிரான ஒட்டுமொத்தத் தொடரையும் 9-0 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியை முழு ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி.

இலங்கை சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு திரும்பிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

 

 

Trending News