3 ஆம் வகுப்பு மாணவிக்கு 3 ஆண்டுக்கு பின் கிடைத்த நீதி

மூன்றாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு 3 ஆண்டுகளுக்கு பின் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : May 31, 2022, 02:20 PM IST
  • 5 ஆண்டு சிறை தண்டனையும், 20ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
3 ஆம் வகுப்பு மாணவிக்கு 3 ஆண்டுக்கு பின் கிடைத்த நீதி title=

சேலம் 3 ரோடு அருகே பிரபல சிபிஎஸ்சி தனியார் பள்ளியான ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக உள்ள சதீஷ்குமார் என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தனது பெற்றோரிடம் புகார் செய்தார். அதன் பேரில் மாணவியின் பெற்றோர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உதவியுடன் 01.09.2018 அன்று ஆசிரியரை பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்பு சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரனையின் தீர்ப்பு இறுதியாக நோற்று வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | நூல் புரோக்கரின் அதிர்ச்சி வாக்குமூலம் - வீடியோ வெளியிட்டதும் தற்கொலை..!

மேலும் இந்த தீர்ப்பில் குற்றவாளி சதீஷ்க்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 20ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிறந்த முறையில் வாதத்தை எடுத்துவைத்து தண்டனை பெற்று தந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் காவல்துறையினருக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்க 3 ஆண்டுகள் ஆனதையடுத்து சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கால தாமதமின்றி விசாரணையும், தீர்ப்பும் வழங்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவி, பெற்றோருக்கு விரைந்து ஆறுதல் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த காலம் தாழ்த்தப்பட்ட நாட்களில் தொடர்ந்து மன உளைச்சலுக்கு அவர்கள் ஆளாகி இருக்கக்கூடும் என்றும், இதை தவிர்க்க பிற்காலத்தில் வரும் பாலியல் வழக்குகளை விரைந்து முடிக்குமாறு மக்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | முதல் லாட்டரி சீட்டிலேயே ₹35 கோடி; ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன பெண்மணி!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News