ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆதார் அட்டை கட்டாம்!

ஜல்லிக்கட்டு போட்டிக்கான வீரா்கள் முன்பதிவு அவனியாபுரத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டை கட்டாயம்.

Last Updated : Jan 11, 2018, 12:42 PM IST
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆதார் அட்டை கட்டாம்! title=

ஜல்லிக்கட்டு போட்டிக்கான வீரா்கள் முன்பதிவு அவனியாபுரத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டை கட்டாயம்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 11 தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை மெரினாவில் மாபெரும் போராட்டத்தை மக்கள் நடத்தியதில் ஜல்லிகட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது.

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 14-ம் தேதி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில்,  தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு  நடைபெற்று வருகிறது. 

இதனைத் தொடர்ந்து வரும் 14 தேதி மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. முன்பதிவு செய்யும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. 

போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளின் உரிமையாளர்களும் தங்களின் ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டையை காட்டி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்துகொள்ள ஆதார் கட்டாயம் என்று முதலில் கூறப்பட்டது, ஆனால் ஆதார் அட்டை கட்டாயம் என்பதில்லை என்றும் ரேஷன் அட்டை வைத்தும் முன்பதிவு செய்யலாம் என்றும் விழா கமிட்டி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Trending News