நேற்று நடந்தது இணைப்பே இல்லை எனவும், இது வணிக ரீதியான உடன்படிக்கை என டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் நேற்று இணைந்து ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்ற நிலையில் இது குறித்து தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில்,
மீடியா நண்பர்களுக்கு... காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறேன். 23ந் தேதி உங்களை சந்திக்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
இந்த உடன்படிக்கை எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
1989ல் தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க, அம்மா அவர்களை பொதுச்செயலாளராக ஏற்றுக் கொண்டு, அவர் தலைமையில் ஒன்றிணைந்தார்கள்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
இன்றோ, இவர்களாலேயே ஏற்று கொள்ளப்பட்ட பொதுச்செயலாளரை நீக்குவோம் என்ற அறிவிப்போடு ஏற்பட்டுள்ள உடன்படிக்கை தொண்டனால் ஜீரணிக்க முடியாத துரோகம்
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
அம்மா அவர்களின் மறைவுக்கு பின் திரு பன்னீர்செல்வத்தையும் பின் திரு பழனிச்சாமியையும் முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கு துரோகம் செய்த நபர்களை
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
கழக தொண்டர்கள் மட்டுமல்லாமல் பொது மக்களும் மன்னிக்க மாட்டார்கள்
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
இரட்டை இலை முடங்குவதற்கு காரணமான பன்னீரோடு கைகோர்க்கும் அளவிற்கு சிலரது பதவி வெறி கண்ணை மறைக்கிறதென்றால் எப்படி தொண்டர்கள் ஏற்று கொள்வார்கள்
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
இந்த துரோகிகளால் எப்படி இரட்டை இலையை மீட்க முடியும்?
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
மீடியா நண்பர்களுக்கு... காய்ச்சல் மற்றும் தொண்டை வலி உள்ளதால், மருத்துவர் ஆலோசனைப்படி ஓய்வில் இருக்கிறேன். 23ந் தேதி உங்களை சந்திக்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 201
நேற்று வரை ஊழல் ஆட்சி நடைபெறுவதாக சொன்ன பன்னீர்செல்வத்தோடு எப்படி தான் இவர்களால் இன்றைக்கு கைக்கோர்க்க முடிகிறதோ?
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
இந்த துரோகிகளால் ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்காகவே, கோடான கோடி கழக தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசியல் பயணம் தொடரும்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
துரோகங்கள் ஒரு போதும் வென்றதாக வரலாறு இல்லை!
துரோகத்தை வேரறுப்போம்! கழகத்தை காப்போம்!!— TTV Dhinakaran (@TTVDhinakaran) August 21, 2017
என கூறியுள்ளார்.