பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு ரூ.500 லஞ்சம்..!

பட்டமளிப்பு விழாவில் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்த பல்கலைக்கழகத்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவருக்குள் வைத்து கொடுத்த லஞ்ச பணத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு....

Written by - Gowtham Natarajan | Last Updated : May 13, 2022, 04:14 PM IST
  • பட்டமளிப்பு விழாவில் கொடுக்கப்பட்ட ரூ.500
  • பத்திரிகையாளர்கள் கடும் அதிருப்தி
  • புகைப்படங்கள் வெளியாகி வைரல்
பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு ரூ.500 லஞ்சம்..! title=

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பி.எச்டி.,பட்டம் பெற்ற 1687 மாணவர்களுக்கும், முதுநிலை, இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது.மேலும், 1,504 பேர் எம்.பில்., 1,50,424 பேர் இளநிலை பட்டம், 48,034 பேர் முதுநிலை பட்டம் என 2,04,362 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Bharathiar University,convocation,Journalists,reporters,Bribery,பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு, பட்டமளிப்பு விழா

இந்நிலையில், இந்த பட்டமளிப்பு விழாவிற்கு செய்தி சேகரிக்க சென்றுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் பைல்களில் பட்டமளிப்பு விழா குறித்த விபரங்கள் மற்றும் அமைச்சர் ஆளுநர் பேச்சு குறிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் பட்டமளிப்பு விழா குறிப்புகள் அடங்கிய பைலில் , ஒரு கவரில் 500 ரூபாய் நோட்டை வைத்து கொடுக்கப்பட்டது அதிர்ச்சியின் உச்சக்கட்டம். ஆளுநர் பங்கேற்கும் விழாவில் 500 ரூபாய் கொடுத்துள்ள நிகழ்வு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Bharathiar University,convocation,Journalists,reporters,Bribery,பட்டமளிப்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு, பட்டமளிப்பு விழா

மேலும் படிக்க | பீப் பிரியாணிக்கு தடை ஏன்? பட்டியலின ஆணையத்திடம் சிக்கிய மாவட்ட ஆட்சியர்!

இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொண்டு இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் லஞ்சமாக கொடுக்கப்பட்ட 500 ரூபாய் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் கைவரிசை காட்டிய ஆசாமிகள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News